கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு OTT தலத்தில் வெளியாகி உள்ள படம் தான் டிக்கிலோனா. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டயம் ட்ராவல் காமெடி படம். வாங்க படம் எப்படி என பார்ப்போம்.

கதை 2017 இல் காதலித்த பெண்ணுடன் நடந்த திருமணம் கசப்பில் போய் முடிய விரக்தியில் EB மணியாக சந்தானம். மின்சார பிரச்சனை சரி செய்ய சென்ற இடத்தில் டயம் மெஷின் கிடைக்க 2020 சென்று கலயாணத்தை நிறுத்த திட்டம் போடுகிறான். மாப்பிள்ளை மணியை வருங்காலத்துக்கு அனுப்ப அவன் தன்  உண்மை நிலையை பார்க்கிறான்.

எனவே இருவரும் திட்டம் போட, மாப்பிளை மணி தன் காதலியின் தோழியை திருமணம் முடிக்கிறான். இந்த திருமணமும் தோல்வியில் முடிய மீண்டும் 2020 ற்கு வந்து EB மற்றும் மாப்பிள்ளை மணியிடம் உன்மையை சொல்கிறான் (கவுண்ட)மணி .

சினிமாபேட்டை அலசல்– பாண்டஸி ஜானர் படத்தில் காமெடி செட் ஆகுமா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது, எனினும் டயம் ட்ராவல் என்ற யோசனையை எடுத்து அதிக அறிவியல் பேசாமல் காமெடி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான நல்ல சிந்தனையை விதைத்துவிட்டார் இயக்குனர் கார்த்திக் யோகி.

சிரிப்பு சரவெடி தான் இந்த டிக்கிலோனா. சந்தானம் தனது காமெடி கூட்டாளிகளுடன் புகுந்து கலக்கிவிட்டார். யுவன் இசை நல்ல பிளஸ். படத்தின் ஓடும் நேரத்தை சற்றே குறைத்திருந்தால், சில இடங்களில் திரைக்கதை தொய்வை தடுத்திருக்கலாம்.

சினிமாபேட்டை வெர்டிக்ட்– பீல் குட் சினிமா தான் இந்த டிக்கிலோனா. சமீபத்தில் வெளியான அசோக் செல்வனின் “ஓ மை கடவுளே” படத்தின் சாயல் பல இடங்களில் வந்து சென்றாலும், சந்தானத்திற்காக தாராளமாக இப்படத்தை பார்த்து ரசிக்கலாம்.

சினிமாபேட்டை ரேட்டிங்  2.75 / 5