சத்யராஜ் வித்தியாசமான வேடங்களில் நடித்த 5 படங்கள்.. அவர் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க

தற்போதுவரை தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் சத்யராஜ். தனது திறமையான நடிப்பால் பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். இவர் பல வேடங்களில் நடித்து ஹிட்டான படங்களின் வரிசையை பார்க்கலாம்.

தாய்நாடு: அரவிந்த்ராஜ் இயக்கிய 1989 இல் வெளியான திரைப்படம் தாய்நாடு. ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, எம் என் நம்பியார், ராதிகா, நாசர், ஜனகராஜ் மற்றும்  பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஆபாவாணன் மற்றும் மனோஜ் கியான். இப்படத்தில் சத்யராஜ் ஆல்பட் மற்றும் ஆனந்தன் கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

உலகம் பிறந்தது எனக்காக: 1990 ஆவது ஆண்டில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் உலகம் பிறந்தது எனக்காக. இப்படத்தில் சத்யராஜ், கௌதமி, ரூபினி, சரண்யா ஆகியோர் நடித்திருந்தனர் இப்படத்திற்கு இசை ஆர்டி பர்மன். இப்படத்தில் சத்யராஜ், ராஜா மற்றும் கோவிந்தன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அமைதிப்படை: அமைதிப்படை திரைப்படம் 1994 வெளியானது. இப்படத்தின் இயக்குனர் மணிவண்ணன். இத்திரைப்படத்தில் சத்யராஜ், மணிவண்ணன், ரஞ்சிதா, சுஜாதா, கஸ்தூரி, மலேசியா வாசுதேவன், காந்திமதி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் சத்யராஜ் அம்மாவாசை ஆக இருந்து பின்னர் எம்எல்ஏ நாகராஜசோழன் கதாபாத்திரத்திலும், இன்ஸ்பெக்டர் தங்கவேல் கதாபாத்திரத்திலும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

வில்லாதி வில்லன்: வில்லாதி வில்லன் திரைப்படத்தை இயக்கி, மூன்று வேடங்களில் நடித்திருந்தார் சத்யராஜ். இப்படத்தில் நக்மா, ராதிகா, சரத்குமார், சில்க் ஸ்மிதா, கவுண்டமணி, ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். எடிசன், மீனாட்சிசுந்தரம் சாஸ்திரியார், கண்ணன் என மூன்று வேடங்களில் சத்யராஜ் இப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெற்றது.

சேனாதிபதி: எம் ரத்னகுமார் இயக்கத்தில் 1996இல் வெளியான திரைப்படம் சேனாதிபதி. இப்படத்தில் சத்யராஜ், சுகன்யா, கவுண்டமணி, செந்தில், விஜயகுமார், சௌந்தர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இப்படத்தில் சத்யராஜ், சேனாதிபதி மற்றும் சேதுபதி கதாபாத்திரத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

நடிகை ரேவதி இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள்.. இதுல ஒரு படம் 3 தேசிய விருது தட்டியது

தென்னிந்திய சினிமாவில் 80’s மற்றும் 90’s காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. பாரதிராஜாவின் மண்வாசனை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆங்கிலம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ...
AllEscort