சட்டை பட்டனை கழட்டி மாஸ் காட்டிய பவானி ரெட்டி.. அழகிய ராட்சசி என வர்ணிக்கும் நெட்டிசன்கள்!

ரெட்டைவால் குருவி, சின்னதம்பி போன்ற சீரியல்களின் மூலம் பிரபலமான பவானி ரெட்டி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் ஒருசில கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக ‘இனி அவனே’ என்ற படத்தில் ஆபாச காட்சியில் நடித்த பவானி ரெட்டியின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பவானி ரெட்டி தன்னுடன் சீரியலில் நடித்த சக நடிகரான பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் ஒரு வருடத்திற்கு உள்ளேயே பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து பவானி ரெட்டி தன்னுடைய உறவினர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்ற தகவல்களும் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பவானி ரெட்டி பங்கேற்க விஜய் டிவி அவரை அணுகி உள்ளதாகவும், அதற்கு பவானி ரெட்டி ஒப்புதல் தெரிவித்ததாகவும் அண்மையில் தகவல்கள் கசிந்து வருகிறது.

இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளனர்.

இந்த புகைப்படத்தில் கண்ணில் கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்தபடி, சட்டை பட்டனை துறந்துவிட்டு, காலரைத் தூக்கி விட்டு, ஒருகையை மடக்கியபடி கெத்து காட்டும் படி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அழகிய ராட்சசியே என வர்ணிக்கின்றனர்.

அத்துடன் இவர் பிக்பாஸில் கலந்துகொள்ள போகிறாரா இல்லையா என்ற ஆர்வத்தில் பவானி ரெட்டி இடமே, அந்தக் கேள்வியை சமூகவலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் எழுப்புகின்றனர். இருப்பினும் அதற்கு பதில் அளிக்காமல் பவானி ரெட்டி மௌனம் சாதிக்கிறார்.