சஞ்சய் விஜய் இயக்கத்தில் துருவ் விக்ரம்.. இப்படி ஒரு காம்போ யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் மகான். விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இன்று வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக படக்குழுவினர் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் படக்குழுவினர் உடன் கலந்து கொண்ட துருவ் பத்திரிக்கையாளர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சுவாரசியமாகவும், கலகலப்பாகவும் பதிலளித்தார்.

அதில் ஒரு பத்திரிக்கையாளர் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உடனான நட்பு குறித்து துருவிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் சிறு வயதில் இருந்தே விஜய் யாருடைய மகன் சஞ்சய் என்னுடைய நெருங்கிய நண்பர்.

அவர் நல்ல கதையுடன் வந்தால் அவருடைய இயக்கத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். பாலிவுட் மாதிரி இங்கும் இரண்டு நாயகர்களின் வாரிசுகள் இணையும் படமாக அது நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மகான் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது துருவ், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து பேசியுள்ளது மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சஞ்சய் தன் தந்தையைப் போல் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல், டைரக்சன் செய்வதில்தான் ஆர்வத்துடன் இருக்கிறார் என்று பல செய்திகள் ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில் துருவ் கூறியதை வைத்து பார்க்கும்போது சஞ்சய் கூடிய விரைவில் படத்தை இயக்குவதற்கு தயாராவார் என்று தெரிகிறது. மேலும் இவர்கள் இருவரும் இணையும் பட்சத்தில் அந்தப் படம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இனி விஜய் டிவி பக்கமே போக மாட்டேன்.. பிரபல தொகுப்பாளினி அதிரடி முடிவு

விஜய் டிவியில் பிரபலமான இரண்டு தொகுப்பாளினிகள் என்றால் அது டிடி மற்றும் பாவனா தான். சமீபகாலமாக விஜய் டிவியில் தலைகாட்டாமல் இருந்து வந்த டிடி சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினரை பேட்டி எடுத்திருந்தார். ஆனால் பாவனாவை ...
AllEscort