கோபியை வெளுத்து வாங்க புது கேரக்டர் அறிமுகம்.. இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே

விஜய் டிவி தொடரில் கூட்டுக்குடும்ப மக்களின் மனதை கவர்ந்த தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் இல் நான்கு மகனுக்கும் அம்மாவாக நடிகை ஷீலா நடித்திருந்தார்.

இத்தொடரில் வயதான ஊனமுற்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார் ஷீலா. பல திருப்பங்களுடன் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி தம்பியான கண்ணன் வீட்டுக்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்கிறான்.

இதனால் மூத்த அண்ணனான மூர்த்தி, கண்ணன் மீது கோபம் கொண்டு கண்ணனை வீட்டை விட்டு வெளியேறுகிறார். கண்ணன் செய்த காரியத்தாலும், அவன் பிரிவாழும் கண்ணனின் அம்மா மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இறக்கிறார்.

அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ஷீலாக்கு இறந்தவர்களுக்கு செய்யும் உண்மையான சடங்குகள் செய்யப் பட்டது. அந்த சடங்குகளுக்கு ஒத்துழைப்பு தந்து மிகவும் தத்ரூபமாக நடித்து இருந்தார் ஷீலா. பாண்டியன் ஸ்டோர்ஸில் இறப்பு காட்சிகள் ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியது. இறந்த காட்சிகளில் நடித்ததற்காக ஷீலாவுக்கு நிறைய பாராட்டுகள் வந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்த அம்மா கதாபாத்திரம் முடிவுற்றதால் விஜய் டிவியின் மற்றொரு தொடர்பான பாக்கியலட்சுமி தொடரில் ஷீலா நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்த எஸ் டி ஆர் ரோசரி, கம்பத்து மீனா இருவரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து ஷீலாவும் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் கால் பதித்துள்ளார். பாக்யலட்சுமி தொடரில் கோபியின் காதலி ராதிகாவின் அம்மாவாக ஷீலா நடிக்கிறார். இதனால் இனிவரும் எபிசோடுகளில் கோபிக்கு ராதிகாவின் அம்மாவால் பிரச்சனை வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஏற்கனவே கோபியின் அப்பாவிற்கு உண்மை தெரிந்ததால் கோபி மிகுந்த அல்லல்பட்ட வந்த நிலையில் இப்போது ராதிகாவின் அம்மாவால் என்ன நடக்கும் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும்.

நடனத்தை வைத்து ஹீரோ வாய்ப்பை பிடித்த 5 நடிகர்கள்.. இயக்குனராகவும் சாதித்த பிரபுதேவா

இன்றைய கால சினிமாவில் நடனம் என்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. அந்த நடனத்தால் சினிமாவில் சாதித்த எத்தனையோ நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் நடன திறமை மூலமாக நடிகர்களாகவும் மாறியிருக்கிறார்கள். அவர்கள் யார் ...
AllEscort