கோபியை விரட்டியடித்த ராதிகாவின் வீடியோ.. பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த ட்விஸ்ட் என்ன தெரியுமா.?

இல்லத்தரசிகளின் விருப்பமான தொடரான பாக்கியலட்சுமியில் இந்த வாரம் எபிசோடுகளுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள். கோபியின் சுயரூபம் ராதிகாவுக்கு தெரிய வருவதால் ராதிகா எடுக்கப்போகும் முடிவு என்ன என இந்த வார எபிசோட் மிகவும் எதிர்பார்ப்புடன் செல்ல இருக்கிறது.

இன்றைய எபிசோடில் கோபியின் உறவினர் திருமண வரவேற்பிற்கு கோபியும், பாக்கியாவும் செல்கிறார்கள். கோபி வாங்கிக்கொடுத்த புடவையை பாக்கிய அணிந்திருந்தார். முதல்முறை கோபியுடன் பாக்கியா வெளியில் செல்வதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். இருவரும் முதல் வரிசை இருக்கையிலேயே அமர்கிறார்கள்.

இந்த திருமண வரவேற்பிற்கு கோபியின் காதலி ராதிகாவும் வருகிறார். இவர் பின்வரிசையில் உள்ள இருக்கையில் அமர்கிறார். இந்நிகழ்ச்சியில் கோபியும், ராதிகாவும் எதிரெதிரே சென்றாலும் இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை. பின் கோபியும், பாக்கியாவும் சாப்பிடுவதற்காக செல்கிறார்கள்.

அங்கு சென்ற ராதிகா, கோபி வேறொரு பெண்ணுடன் அமர்ந்து இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைகிறார். ராதிகா அங்கு பாக்யாவின் புடவையைப் பார்த்து, இது கோபி எனக்கு வாங்கிய புடவை என்று கோபி சொன்னதை நினைத்து பார்க்கிறார். கோபி அவருடைய உறவினரை பார்த்து முகத்தை மறைத்துக் கொள்கிறார்.

தன்னை பார்த்து தான் முகத்தை மறைத்து கொள்கிறார் கோபி என்று ராதிகா நினைக்கிறார். கோபியும், பாக்கியாவும் சாப்பிடும் போதும் கேமராமேன் போட்டோ எடுக்கிறார். இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி விடுகிறார்கள். இதைப்பார்த்த ராதிகா அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து செல்கிறார்.

கோபி தன் மனைவியைப் பற்றி சொன்னதெல்லாம் பொய் என்று அழுதபடி காரில் செல்கிறார் ராதிகா. பின்பு கோபி, ராதிகா வீட்டிற்கு செல்கிறார். அங்கு கோபமாக உள்ள ராதிகா உங்களுடன் பேச விருப்பம் இல்லை என்கிறார். அப்போ என்னை போக சொல்கிறாயா என்ன கோபி கேட்க மௌனமாக இருக்கிறார் ராதிகா.

கோபி, ராதிகாவை சமாதானப்படுத்த வரும்போது ராதிகா அவரைத் தடுக்கிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம். ராதிகாவால் விரட்டி விடப்பட்ட கோபி மீண்டும் பாக்கியா உடன் இணைந்து குடும்ப வாழ்க்கை வாழ்வாரா, இல்ல மீண்டும் ராதிகாவை தேடி செல்வாரா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ராதிகாவை சமாதானப்படுத்த கோபி