கோபியின் செயலால் உயிரை விட்ட தந்தை.. பாக்கியலட்சுமி சீரியலின் புதிய திருப்பம்!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் முக்கியமான ஒன்று பாக்கியலட்சுமி நெடுந்தொடர். இந்தத் தொடரில் ஏற்கனவே பல புதுப்புது திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இதனைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக கதைக்களத்தில் மேலும் ஒரு ட்விஸ்ட்.

இந்த வாரத்தில் கோபி ராதிகாவிற்காக ஒரு காரை பரிசளித்து அதற்கு பூஜை செய்ய கோவிலுக்கு சென்றனர். அங்கே வந்த கோபியின் தந்தை ராமமூர்த்தி அவர்கள் இருவரையும் ஒன்றாக கண்டு ஆடிப் போய் விட்டார்.

ஏனெனில் ராதிகா கோபியின் முன்னாள் காதலி என்பதை ராமமூர்த்தி நன்கு அறிந்திருந்தார். இவர்கள் எப்படி மீண்டும் நெருங்கிப் பழகுகிறார்கள். இதனால் பாதிக்கப்படப்போவது பாக்கியா தான் என மிகவும் வருத்தப்பட்டு கோபத்துடன் வீடு திரும்பினார் கோபியின் தந்தை.

வீட்டிற்கு வந்த கோபியை அங்கு நடந்ததை பற்றி கேட்டு ராமமூர்த்தி ரைடு விட, பதறிப்போனார் கோபி. மேலும் கோபியை கண்டித்து விட்டு ராதிகாவிடம் சென்று பாக்கியா கணவர் பற்றி தெரியுமா என நாசுக்காக கேட்க அவர் இல்லை என கூறினார்.

இவ்வாறு தப்பு தனது மகன் மீது உள்ளதை நன்றாக உணர்ந்தார் கோபியின் தந்தை. அதேவேளையில் கோபி எங்கு உண்மை தெரிந்து விடுமோ? என்ற பயத்தில் பாக்கியாவை நன்றாக பார்த்துக் கொள்கிறார்.

வரும் வாரத்தில் மீண்டும் கோபி ராதிகாவுடன் நெருங்கிப்பழகப் போவது போலும், இதனால் மனமுடைந்து உடல்நிலை சரியில்லாமல் கோபியின் தந்தை இறப்பது போலும்பல ட்விஸ்ட்கள் பாக்கியலட்சுமி சீரியலில் அரங்கேற உள்ளது.

ருத்ர தாண்டவம் படத்தை போட்டுக் காண்பித்த மோகன் ஜி.. அதிர்ந்த அரசியல் பிரபலங்களின் விமர்சனம்

திரெளபதி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் ருத்ர தாண்டவம். இப்படம் வெளிவரும் முன்பே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ருத்ர ...