கோடி கோடியாய் காசு இருந்தும் அதைத் தேடி ஓடும் 7 பிரபலங்கள்.. த்ரிஷா, சமந்தாவுக்கு ரொம்ப பிடிக்குமாம் 

கோடி கோடியா பணம் கொட்டிக் கிடந்தாலும் நிம்மதிய விலை கொடுத்து வாங்க முடியாது என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னாங்க. அப்படி ஒரு விஷயம் தான் நம்ம சினிமா நடிகர், நடிகைகள் விஷயத்தில் நடந்து வருகிறது.

சமீபகாலமாக சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் நிம்மதியைத் தேடி எங்கெங்கோ ஓடிக் கொண்டிருக்கின்றனர். அதில் நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வேலை பளுவில் இருந்து ரிலாக்ஸ் செய்வதற்காக பல வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது பிரபலங்கள் அனைவரும் கோயம்புத்தூரில் இருக்கும் ஈஷா மையத்தை நோக்கி படையெடுத்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த ஈஷா அறக்கட்டளை ஜக்கி வாசு தேவால் உருவாக்கப்பட்டது.

அதில் வடிவமைக்கப்பட்டுள்ள 112 அடி சிலை மிகவும் புகழ்பெற்றது. இதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பாராட்டினார். ஒவ்வொரு வருடமும் வரும் மகா சிவராத்திரி அங்கு மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் த்ரிஷா, சமந்தா, நித்யா மேனன், ராய்லட்சுமி, காஜல் அகர்வால், தமன்னா, ராணா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த ஈஷா மையத்திற்கு சென்று வந்துள்ளனர். அங்கு செல்வதன் மூலம் அவர்களுக்கு மன நிம்மதியும், ஒரு பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைப்பதாக கூறுகின்றனர்.

மேலும் அந்த மகா சிவராத்திரி அன்று கலந்து கொள்ளும் நடிகைகள் அனைவரும் சத்குருவுடன் இணைந்து பரவச நடனமும் ஆடுகின்றனர். அப்படி அவர்கள் நடனம் ஆடும் பொழுது அந்த சிவனே வந்து சிவ தாண்டவம் ஆடியது போல் இருக்கிறதாம்.

இது தவிர ஒவ்வொரு வருடமும் அங்கு செல்வதை பல நடிகைகள் வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் அனைவரும் அங்கு சென்று விட்டு வந்த போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.