இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் நடிக்க இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென விஜயுடன் அப்படி நடிக்க மாட்டேன் என ஒரு நடிகை குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் கூறுவதும் பயமாகத்தான் இருக்கிறது. சரி விஷயத்துக்கு வருவோம்.

விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகளை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் டிசம்பர் மாதத்தில் வெளிவரும் என தெரிகிறது.

இப்போதும் இளம் நடிகைகளுடன் ஜோடி சேரும் அளவுக்கு இளமையாகத் தான் இருக்கிறார் விஜய். ஆனால் அவருடன் ஆரம்ப காலகட்டங்களில் ஜோடியாக நடித்த நடிகைகள் பலரும் சினிமாவில் எக்ஸ்பயரி ஆகிவிட்டனர். அதில் ஒருவர்தான் நம்ம இடுப்பழகி சிம்ரன். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் இப்போது மார்க்கெட் இல்லாத நடிகைதான்.

இருந்தாலும் தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களில் தன்னால் முடிந்த அளவுக்கு நியாயம் சேர்த்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் படங்களில் அவருக்கு அம்மாவாக நடிக்க சிலர் கேட்டுள்ளனர். ஏற்கனவே சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்ததால் விஜய் உடன் ஆரம்ப காலகட்டத்தில் ஜோடி போட்ட சிம்ரன் விஜய்க்கு அம்மாவாக நடிப்பதில் என்ன தவறு என்பதுதான் இந்த லாஜிக்.

ஆனால் சிம்ரன் மற்ற நடிகர்களைவிட விஜயுடன் நடிக்கும் போது எங்களுடைய ஜோடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது எனவும் அவருக்கு அம்மாவாக நடித்தால் கண்டிப்பாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அப்படி அம்மா கதாபாத்திரத்தில் நடித்தால் கோடி கோடியாக தருவீர்கள் என்றால் எனக்கு அப்படிப்பட்ட பணமே வேண்டாம் என்று கூட சொல்லி விட்டாராம். விஜய் மற்றும் சிம்ரன் ஜோடியாக நடித்த படங்களில் உங்களுடைய ஃபேவரைட் என்ன என்பதை கமெண்ட்டுகளில் தெரிவிக்கலாம்.