கோடிகளில் புரளும் வெற்றிமாறன்.. ஒரு படத்துக்கு இவ்வளவு கோடியா?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் இடம் பிடித்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

தனக்கு உன்டான பாணியில் பிரமாதமாக கதை சொல்வதில் வித்தகர் பொல்லாதவனில் துவங்கி அசுரன் வரை என கொடுத்தவை அனைத்தும் வெற்றிப்படங்களே.

சில படங்களுக்கு கதை வசனமும் சில படங்களுக்கு இயக்கம் கதை, வசனம், நாவல்களை தழுவிய படங்களுக்கு இயக்கம் மட்டும் என தனது தனித்துவத்தை அடுக்காத தருணமே இல்லை.

3மாத புராஜக்ட் 6மாத புராஜக்ட் 1 வருட புராஜக்ட் என எதற்கும் கணக்கு வழக்கு பார்ப்பதிலிருந்து சற்றே விலக்களிக்கறார் வெற்றி மாறன். எதிர்பார்த்தது கிடைப்பதற்காக எதிர்காலம் நோக்கி காத்திருப்பதே வழக்கமாய் கொண்டவர் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் என்பதே அறிதான ஒன்றுதான்.

கோடிகளை ஊதியமாக பெறும் நடிகர்களை வைத்து படம் செய்தாலும் இப்போது தான் 1கோடியை தொட்டிருந்தார் வெற்றி மாறன்.

கதையும் கதைக்கான களமும் என ஒவ்வொன்றையும் தேடித்திரிந்து மெனக்கடுபவரின் ஊதியம் மிக சொற்பம் தான். ஆரம்பத்தில் கிடைக்காத வாய்ப்புகள் மத்தியில் கிடைத்தனாலோ என்னவோ போதுமானதை கேட்டுப்பெறுகிறார் வெற்றிமாறன்.

இப்போது விஜய் சேதுபதி சூரி நடிக்கும் விடுதலை  என்கிற படத்தை இயக்கி வருகிறார். மேலும் ஒரு வெப் சீரியஸ் இவரின் கதை வசனத்தில் உருவாகிறது. அடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தையும் இயக்க உள்ளார்.

ஒரு படத்திற்கு 6 கோடிகள் வரை ஊதியமாக வாங்கி வருகிறார் இயக்குனர் வெற்றி மாறன். அடுத்த படமான வாடிவாசலுக்கு 30 கோடிகளை ஊதியமாக கேட்டுள்ளார் என்றும் செய்திகள் வருகிறது.

மணிரத்னத்தால் 2 நாட்கள் சாப்பிடாமல் இருந்த பாரதிராஜா.. காரணம் கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க

சாமானிய மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை அச்சுபிசகாமல் ஒரு படமாக காண்பிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் இயக்குனர் பாரதிராஜா அதை மிகவும் அசால்ட்டாக செய்து காட்டுவார். அவரின் படங்களில் ஆடு மாடுகள் ஏன் மரங்கள் ...