கோடம்பாக்கம் மார்க்கெட்டை அலற விடும் யோகி பாபு.. கூரையை பிச்சுட்டு கொட்டும் அதிர்ஷ்டம்

சினிமாவில் ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இன்று ஒரு நடிகராக முன்னேறி இருப்பவர் யோகி பாபு. ஆரம்பத்தில் மிகவும் அடிமேல் அடிவாங்கி பார்ப்பவர்கள் எல்லாம் வெறுத்து ஒதுக்கிய நபராக இருந்த அவர் இன்று திரையில் வந்தாலே அனைவருக்கும் சிரிப்பு தான்.

அந்த அளவுக்கு அவர் மக்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இன்று ஒரு நல்ல நிலைமையில் இருந்தாலும் ஆரம்பத்தில் அவர் கஷ்டப்பட்ட நிகழ்வுகளை மறக்காமல் நிறைய விஷயங்கள் செய்து வருகிறார். தன்னை தூக்கிவிட்டவர்களுக்காக அவர் இப்போதும் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது ஹீரோவாக கதையின் நாயகனாக பல திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். கூர்கா, மண்டேலா போன்ற திரைப்படங்கள் அவரை சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. அது மட்டுமல்லாமல் ரசிகர்களிடம் தனி மதிப்பையும் பெற்றுக் கொடுத்தது.

இதனால் நிறைய பேர் இவரை அணுகி காமெடியனாகவும், ஹீரோவாகவும் நடிப்பதற்கு நிறைய கதைகளை கூறியிருக்கிறார்கள். அதில் முக்கால்வாசி பேர் யோகிபாபுவுக்கு தெரிந்தவர்கள் மற்றும் அவருடைய கஷ்ட காலத்தில் உதவியவர்கள்.

இதன் காரணமாக யோகி பாபு அவர்களிடம் கதையை ஓகே செய்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதோடு படத்தை தயாரிப்பதற்கு ப்ரொடியூசரோடு வாருங்கள் என்றும் கூறியிருக்கிறார். இதனால் யோகிபாபுவின் கால்ஷூட் வைத்துக் கொண்டு 50 பேர் கொண்ட குழு கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது.

இதனால் ஹீரோக்களை புக் செய்ய செல்லும் அவர்கள் யோகி பாபு சம்மதித்துவிட்டார் உங்கள் தேதி மட்டும் தான் பாக்கி என்று கூறுகிறார்களாம். இப்படி யோகி பாபு தன்னை வளர்த்துவிட்டவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் நன்றி கடன் செலுத்துவதை பார்த்த பலரும் அவரைப் பற்றிதான் சலசலத்து கொண்டிருக்கின்றனர்.