கொழுக்கட்டையுடன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறிய பிரியா பவானி சங்கர்.. வைரல் புகைப்படம்.!

செய்தி வாசிப்பாளராக தனது திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவிட்டு அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் மூலம் சின்னத்திரை நடிகையாக பிரபலமானார்.

பல வருடங்கள் கழித்து மேயாதமான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் மற்றும் மாபியா. மான்ஸ்டர் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாக உள்ள ஹாஸ்டல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஓரளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமடைந்தது.

சமீபகாலமாக சமூக வலை தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

தற்போது அவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கொழுக்கட்டை சாப்பிடுவதுபோல் கூறியுள்ளார். மேலும் இப்போதைய படத்தின் வெளியீட்டு நம்ம வேலையை பார்போம் எனவும் கூறியுள்ளார் தற்போதைய இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதல் முறையாக 50 லட்சம் பட்ஜெட்டில் உருவான எம்ஜிஆர் படம்.. இப்ப அதோட மதிப்பு பல கோடி

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் எம்ஜிஆர். இவருடைய படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அப்போது எம்ஜிஆர் நடித்த படங்கள் என்றாலே அதற்கு தனி வரவேற்பு இருக்கும். இதனாலேயே பல ...