கொல்கத்தா காளிக்கு உன்ன நேர்ந்து விட்டுட்டேன்.. அண்ணாத்த, வேதாளம் படத்தின் ரகசியத்தை உடைத்த சிவா

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் அண்ணாத்த. இப்படம் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்திய பேட்டியில் சிவா அண்ணாத்த படத்தினை பற்றி பல்வேறு விதமான கருத்துக்களை கூறினார். மேலும் படத்தில் ஒரு சில காட்சிகள் மாற்றி அமைப்பதற்கான காரணத்தையும் கூறினார்.

அதாவது முதல்பாதியில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா இவர்கள் இருவர் மட்டுமே பார்த்துக் கொள்வது போலவும் அதன் பிறகு இவர்கள் இடையே ஏற்படும் காதல் மட்டும் எடுப்பதாக திட்டமிட்டிருந்தோம் எனக் கூறினார். ஆனால் கீர்த்திசுரேஷ் முதல் பாதியில் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்துதான் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகளும் முதல் பாகத்தில் இடம்பெற்றதாக கூறினார்.

அண்ணாத்த படம் விஸ்வாசம் படம் போல் இருப்பதாக பலரும் கூறுகிறார்கள் அதற்கு காரணம் இரண்டுமே ஒரு குடும்ப பாங்கான படம் எனக் கூறினார். மேலும் இந்த படமும் வேதாளம் படத்துடன் ஒத்துப்போகும் என நாசுக்காக தெரிவித்தார். அதாவது வேதாளம் படத்திலும் தங்கச்சி பாசம் இடம்பெற்றிருக்கும் அதே தான் கீர்த்தி சுரேஷை வைத்து காட்டி உள்ளதாக கூறினார்.

வேதாளம் படமும் அண்ணாத்த படமும் கொல்கத்தாவில் நடக்கும் சம்பவங்களை கொண்டு தான் இருக்கும் அதற்கு காரணம் எனக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடப்பது போல் படத்தில் காட்சிகள் எடுத்து இருப்பேன். ஆனால் நான் மீண்டும் கொல்கத்தாவை எடுப்பதற்குக் காரணம் அங்குதான் பெண்களுக்கான வைப்ரேஷன் அதிகமாக இருக்கும் என கூறினார்.

அதாவது கொல்கத்தாவில் காளிமா தேவி, துர்கா தேவி போன்ற கடவுள்கள் அங்கு அதிகமாக இருக்கும். மேலும் பெண்கள் அனைவருமே தைரியமாக இருப்பார்கள். அதனால்தான் அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற தங்கச்சி கதாபாத்திரமும் கொல்கத்தாவில் நடப்பது போல் படத்தில் காட்சி வைப்பதற்கு காரணம் என கூறினார்.

மேலும் படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் அவர்கள் தன்னை மிகவும் பாராட்டியதாகவும் அதன்பிறகு படத்தில் இடம்பெற்ற காட்சிகள் சிறப்பாக உள்ளது என கூறியதாக தெரிவித்தார். பின்பு சிவா படத்தில் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளதாகவும் கூறினார். ரஜினிகாந்த் மற்றும் கலாநிதி மாறன் இருவரும் படத்தை பார்த்துவிட்டு சிவாவை பாராட்டியது மட்டுமில்லாமல் சிவாவிற்கு ரஜினிகாந்த் கண்ணத்தில் முத்தம் கொடுத்ததாகவும் கூறினார்.

வடிவேலு வருகையால் பறிபோகும் பட வாய்ப்புகள்.. பலரின் கல்லா பொட்டியில் கை வைத்த வைகைபுயல்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் வடிவேலு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அதனால் பல இயக்குனர்களும் வடிவேலுவை வைத்து படங்களை இயக்கினார். வடிவேலு காமெடியனாக ...
AllEscort