தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் நாகேஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அதனாலேயே பல இயக்குனர்கள் நாகேஷ் வைத்துதான் படங்களை இயக்குவேன் என காத்திருந்த காலங்கள் உண்டு.

அதுமட்டுமில்லாமல் அனைத்து நடிகர்களுடனும் நாகேஷ் நடித்துள்ளார். இவர் புகழின் உச்சியில் இருந்தபோது கதாநாயகர்கள் கூட நாகேஷ்காககாத்திருந்து படங்கள் நடித்தது உண்டு என பல பிரபலங்களும் பல பேட்டிகளில் கூறியுள்ளனர். அந்த அளவிற்கு ஒரு காலத்தில் சினிமாவில் ரவுண்டு வந்தார் நாகேஷ்.

அதேபோல் மனோரமாவும் சினிமாவில் அறிமுகமான அதே காலத்திலேயே பல வெற்றி படங்களை கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து பல கதாநாயகிகளுடன் இணைந்து பல படங்களில் நடித்தார். இவர் கிட்டத்தட்ட 1000 மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனையும் படைத்தார்.

சினிமாவில் நகைச்சுவை கதாநாயகர்களாக இருந்த நாகேஷ் மற்றும் மனோரமாவுக்கு இடையே விரிசல் ஏற்பட்டதாக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார். அதன் பிறகு இருவரும் பெரிய அளவில் நட்பு வைத்துக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார். நாகேஷ் மனைவியின் தம்பி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அந்த பலி நாகேஷ் மீது விழுந்தது. அப்போது எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்துள்ளார்.

போலீஸ் தரப்பில் மனோரமாவை சாட்சி சொல்வதற்கு சேர்த்துள்ளனர். ஆனால் மனோரம்மா நீதிமன்றத்தில் வந்து சாட்சி சொல்ல மாட்டேன் என கூறியுள்ளார். நாகேஷுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வராமல் இருந்தது தான் அவர்களுக்குள் ஏற்பட்ட விரிசல் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

பின்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு விசாரணை அடிப்படையில் நாகேஷ் நிரபராதி என தீர்ப்பளித்தது. அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் பெரிய அளவில் நட்பு இல்லை என கூறியுள்ளார்.