கொம்பன் முத்தையா கூட்டணியில் கமலஹாசன்.. ஆனா ஹீரோ இவர் இல்லையாம்!

உலகநாயகன் கமலஹாசன் படத்தை முத்தையா இயக்கப்போவதாக சமீபத்தில் இணையத்தில் தகவல் வெளியானது. முத்தையா பெரும்பாலும் கிராமத்தின் சாயலில் உள்ள படங்களை தான் இயக்கியுள்ளார். கார்த்தியின் கொம்பன், விஷாலின் மருது, சசிகுமாரின் கொடிவீரன், விக்ரம் பிரபுவின் புலிகுத்தி பாண்டி போன்ற கிராமத்து கதை களத்தை மையமாகக் கொண்ட படங்களை இயக்கியுள்ளார்.

இப்போது மீண்டும் கார்த்தியை வைத்து விருமன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்நிலையில் முத்தையா, கமலஹாசனுடன் இணைவதாக வந்த செய்தி உண்மைதான். இப்படம் விருமாண்டி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என பலரும் கூறி வந்தனர்.

தற்போது கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிகட்ட வேலை நடந்து வருகின்றது. இந்நிலையில் முத்தையா இயக்கும் படத்தில் கமலஹாசன் ஹீரோவாக நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் கமலஹாசன் இப்படத்தை தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

தற்போது கமலஹாசன், சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் கமலஹாசன் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்க உள்ளார். இப்படமும் கண்டிப்பாக கிராமத்தின் பின்புலத்தைக் கொண்டு தான் இருக்கும்.

முதல்முறையாக ஆர்யா இயக்குனர் முத்தையா உடன் இணையுள்ளார். சமீபத்தில் ஆர்யா, கிராமத்தின் சாயலை வைத்து எடுக்கப்பட்ட சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஆர்யாவுக்கு வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுத் தந்தது.

கிராமத்துக் கதையை எடுப்பதில் வல்லவரான முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்க உள்ளதால் இப்படமும் வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றன. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.