தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, டாப்ஸீ, ராதிகா, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் நேரடி ஓடிடி ரிலீஸ் ஆகியுள்ள படம் அனபெல் சேதுபதி. பட தலைப்பு, ட்ரைலர் வைத்தே இது காமெடி பேய் படம் என்பது தெரியவந்தது. வாங்க படம் எப்படி என பார்ப்போம் …

அரண்மனை செட் அப், தான் வாழந்த இடத்துக்கு தானே வருவது, பின்னர் பழி தீர்ப்பது என்பதெல்லாம் பழைய டெம்ப்லேட் தான். எனினும் துளியும் திகில் காட்சிகள் இன்றி படத்தை இயக்கியுள்ளார் தீபக். ஜெகபதி பாபு தவிர்த்து அனைவரும் மிக மிக நல்லவர்கள், பேய் ஆன பின்பு கூட. லாஜிக் எதிர்பார்க்க கூடாது என இயக்குனர் யோகி பாபு வாயிலாக படத்தின் துவக்கத்திலியே சொல்லிவிட்டார்.

படம் ஆரம்பித்து ஒரு மணிநேரம் கழித்து தான் சேது வருகிறார், நேரடி பிளாஷ் பேக் பகுதியில். டோலிவுட் ரசிகர்களை மனதில் வைத்து நம் கோலிவுட் ஆர்ட்டிஸ்ட் உடன் பல தெலுங்கு சினிமாவின் பிரபலங்களை படத்தில் தேர்ந்தெடுத்துள்ளனர் இந்த டீம்.

படத்தை முடித்தாக வேண்டும் என்பதற்க்காக ஒரு கிளைமாக்ஸ். சுமாரான இசை, டீசன்ட் எடிட்டிங், தொய்வான திரைக்கதை என்று தான் சொல்ல வேண்டும். கதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் ஸ்டார் வால்யூ மற்றும் மேக்கிங்கில் அசத்த வேண்டிய படம் தான் இது, எனினும் கொரானா காலகட்ட கட்டுப்பாடுகளில் தான் எதிர் பார்த்த விதத்தில் இயக்குனரால் படத்தை முடிக்க முடியவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது.

தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருக்கும் பட்சத்தில் செம்ம பிளாப் ஆகியிருக்கும், எப்படியோ நேரடி ஓடிடி ரிலீஸ் செய்து தயாரிப்பாளர் தப்பித்துக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும். வீக்கெண்ட் பொழுதை கழிக்க சுமாரான ஒரு காமெடி படமே இந்த அனபெல் சேதுபதி.

சினிமாபேட்டை ரேட்டிங்  2.25 /5