கொட்டுகிற மழையில் ரொமான்ஸ் தூக்கலாக காண்பித்த இதயத்தை திருடாதே சீரியல்.. குளிர்ந்து போன ரசிகர்கள்!

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான, சில நாட்களிலேயே காண்பவர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட சீரியல்தான் இதயத்தை திருடாதே. இந்த சீரியலில் கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் இடையே இருக்கக்கூடிய ரொமான்ஸ் சீன்களுக்கு ஏராளமான இளைஞர்கள் ரசிகர்களாகியுள்ளனர். இந்த நெடுந்தொடரில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடிகா் பிரவீன்குமார் கதாநாயகனாகவும், சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஹிமா பிந்து கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

இதில் கதாநாயகன் ஒரு ரவுடியாகவும் பிரபல எம்.எல்.ஏ.வின் அடியாளாக பணிபுரிகிறார். சந்தர்ப்ப சூழ்நிலை காரணத்தினால் கதாநாயகியை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு பலவித திருப்பங்கள் ஏற்பட்டு, கதாநாயகன் திருந்தி சாதாரண மனிதனாக வாழ முயற்சிப்பதில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொண்டு வருவதுபோல் சீரியல் படுஜோராக ஓடியது.

இந்த சீரியலின் முதல் அத்தியாயம் திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையில் ஏற்படக்கூடிய காதலையும், நேர்மையான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தையும் கூறி முடிவு பெற்று, தற்போது கணவன், மனைவி, குழந்தை என இரண்டாவது அத்தியாயத்தில் அடி எடுத்து வைத்துள்ளனர். கதாநாயகி தனது குழந்தையிடம் அவளது தந்தை பற்றி கூற மறுத்து விடுகிறாள்.

ஆனால் கதாநாயகனுக்கு தனது மகளின் உண்மை அனைத்தும் தெரியவருகிறது. இந்த சூழலில் சென்னையில் மழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டு, கதாநாயகனும் கதாநாயகியும் இவர்களது குழந்தையுடன் ஒன்றாக இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு சில நாட்களுக்கு இவர்கள் வெளியில் வரயியலாத நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் தற்போது கடும் மழைக் காரணத்தினால் வெள்ளம் ஏற்பட்டது போன்ற காட்சிகளை இதயத்தை திருடாதே குழுவினர் அதிக அளவில் செலவு செய்தும், தங்களின் முழு உழைப்பையும், ஒத்துழைப்பையும் கொடுத்து, எடிட்டிங், கிராபிக்ஸ் என அனைத்தையும் சிறப்பாக கையாண்டு வெகு சிறப்பாக படம்பிடித்து வருகின்றனர். ரசிகர்களின் பார்வையை தங்கள் வசம் முழுமையாக ஈர்க்க முயன்று வருகின்றனர்.

இடி, மின்னல், மழை இதன் காரணத்தினால் ஏற்படக்கூடிய பெரும் வெள்ளப்பெருக்கு, இவை அனைத்தையும் சிறப்பாக படம் பிடித்துள்ளனர். நிஜமாகவே நிகழும் சம்பவம் போல் காட்சியளிக்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால் சிவாவும், சஹானாவும் ஒன்றாக இருக்க கூடிய இந்த சீன்களில், இயக்குனர் நிச்சயமாக ரொமான்ஸ் சீன்களை அள்ளித் தெரிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

வடிவேலு நடிக்க வேண்டிய படத்தில் நடித்த யோகி பாபு.. திமிரால் வாய்ப்பை இழந்த சோகம்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் வடிவேலு. சமீபகாலமாக இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார். அதற்கு காரணம் வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைதான் என சினிமா வட்டாரத்தில் பலரும் ...