கொடுத்த கால்ஷுட்டையும் திரும்ப வாங்கிய அனுஷ்கா.. உடம்பில் வந்த மருத்துவ கோளாறு

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்காவுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. திறமையான நடிகையாக ரசிகர்களை கவர்ந்த இவர் அருந்ததி, பாகுபலி போன்ற திரைப்படங்களில் அற்புதமாக நடித்திருந்தார்.

வரலாற்று கதாபாத்திரம், இளவரசி கேரக்டர் என்றாலே அனுஷ்கா தான் நினைவுக்கு வரும் அளவுக்கு அவர் அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி போய் நடிப்பார். இதுவே அவருக்கு பல வெற்றிகளை தேடி கொடுத்தது. மேலும் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக அனுஷ்கா ரொம்பவும் மெனக்கெடுவார்.

அந்த வகையில் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக உடல் எடையை ஏற்றி நடித்த அனுஷ்கா பலரின் பாராட்டையும் பெற்றார். ஆனால் அதுதான் அவருக்கு வினையாக மாறியது. ஏனென்றால் அதன் பிறகு அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் முற்றிலும் குறைந்து போனது. இருப்பினும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அனுஷ்கா தற்போது பட வாய்ப்புகள் கிடைத்தும் அதை வேண்டாம் என்று மறுத்து வருகிறாராம். ஏனென்றால் சமீப காலமாக அனுஷ்காவுக்கு உடலில் சில பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது அவருக்கு தைராய்டு பிரச்சினை அதிகமாக இருக்கிறதாம். இதனால் இப்பொழுது படங்களில் நடிக்க வேண்டாம் என்று அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த வகையில் ஏ எல் விஜய் ஒரு படத்திற்காக இவரை அணுகியுள்ளார்.

முதலில் அந்த படத்தில் நடிக்க சம்மதித்த அனுஷ்கா அதன் பிறகு என்னால் இப்பொழுது நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். ஏற்கனவே அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதில் கிடைத்த வாய்ப்பையும் வேண்டாம் என்று அவர் தவிர்ப்பது அவரின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அந்த கேரக்டரில் விஜய் சேதுபதியா.. கைவிட்டுப்போன புஷ்பா படம்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் புஷ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். செம்மரக்கடத்தல் மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. ...