கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே விஜய்யுடன் ஜோடி சேராத பிரபல நடிகை.. அதற்கு காரணம் இவர்கள் தானாம்.!

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் விஜய் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட் இப்படத்தினை இவரது ரசிகர்கள் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் தற்போதே படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விஜய் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் ஒரு சில நடிகைகளுடன் இன்றுவரை அவரால் ஜோடியாக நடிக்க முடியவில்லை. அதற்கு வாய்ப்பு ஒரு காரணமாக இருந்தாலும் காலமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. மீனா இதுவரை பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் விஜய்க்கு எந்த படத்திலும் ஜோடியாக நடிக்கவில்லை ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் விஜயுடன் நடனமாடி இருப்பார். இதனை அவரே பலமுறை பேட்டிகளில் கூறி உள்ளார்.

இவரை தொடர்ந்து ரோஜா பல படங்கள் நடித்துள்ளார். விஜயும் ரோஜாவும் ஃபேமஸ் ஆக இருந்த காலத்திலேயே இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. அதற்கு காரணம் ரோஜா அப்போது பல முதுமை நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததால் இளம் ஹீரோவாக வலம் வந்த விஜய்க்கு ஜோடியாக போடுவதற்கு பல இயக்குனர்கள் பலரும் தயக்கம் காட்டியதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மேலும் அப்போது நினைத்திருந்தால் கூட ஜோடியாக நடித்து இருக்கலாம் இன்றைய காலகட்டத்திற்கு அது வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் நடிப்பதற்கு பல நடிகைகளும் போட்டி போட்ட காலங்கள் உண்டு. தற்போது விஜய்யின் படங்கள் மீதான வரவேற்பு அதிகரித்து தான் இருக்கிறது.

விஜய்க்கு வயது அதிகமாகி போனாலும் அதைவிட இளமை அதிகமாக கூடுகிறது. அதனால் தற்போது வரை பல முன்னணி நடிகைகள் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றனர். தற்போது விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் பார்த்து அனைத்து நடிகர்களுமே அசந்து போயுள்ளனர். அந்த அளவிற்கு இவரது படங்கள் தொடர்ந்து வசூலை வாரி குவித்து வருகின்றன. தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.