நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை தயாரித்தார். அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் தல அஜித்தை வைத்து வலிமை என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்தப் படம் ஆரம்பிக்கும் பொழுது 25 கோடி பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் இடையில் கொரோனா இரண்டாவது அலை மற்றும் ஊரடங்கு போன்ற காரணத்தினால் படப்பிடிப்பு சற்று தாமதமானது. மேலும் வலிமை படத்தில் நடித்த நடிகர்கள் கொரோனா காலகட்டத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டி வந்தனர்.

இதனால் படத்தின் நடிகர்கள் மாற்றப்பட்டு மீண்டும் படமாக்கப்பட்டது. எப்போதோ வெளியிட வேண்டிய இத் திரைப்படம் பல குளறுபடிகளால்  தள்ளிப் போனது. தற்போது வலிமை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாக போனதால் சற்று அதிருப்தியில் உள்ளார். இதை அறிந்து கொண்ட தல அஜித், போனி கபூருக்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்து தருவதாக வாக்குக் கொடுத்து உள்ளார். இந்தப் படம் நிச்சயம் குறைந்த பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

தல அஜித் எப்பொழுதும் தன் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். படம் நஷ்டம் அடைந்தால் கூட அந்த தயாரிப்பாளருக்கு மீண்டும் ஒரு படம் நடித்து கொடுத்து வெற்றியை தருவார். அந்த வகையில் போனி கபூருக்கு மீண்டும் ஒரு படம் நடித்துத்தர அஜித் ஒப்புக் கொண்டுள்ளார்.