கே பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 5 படங்கள்.. குருவும் சிஷ்யனும் வேற லெவல் போங்க

கே பாலச்சந்தர் பல நடிகர் நடிகைகளை தன் படத்தின் மூலம் அறிமுகம் செய்துள்ளார். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் ரஜினியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

அபூர்வ ராகங்கள்: 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகமானார் ரஜினிகாந்த். இப்படத்தில் கமலஹாசன்,ஸ்ரீவித்யா ரஜினியுடன் நடித்திருந்தனர்.

மூன்று முடிச்சு: 1976ஆம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சு திரைப்படத்தில் ஸ்ரீதேவி, கமலுடன் நடித்திருப்பார். இப்படத்தில் வில்லனாக ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

தப்புத்தாளங்கள்: 1978 ஆம் ஆண்டு தப்புத்தாளங்கள் படத்தில் சரிதா,ரஜினிகாந்த் நடித்து இருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் எடுக்கப்பட்டு இருந்தது.

நினைத்தாலே இனிக்கும்: 1979ஆம் ஆண்டு நினைத்தாலே இனிக்கும் படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருப்பார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தில்லு முல்லு: 1981ஆம் ஆண்டு நடித்த தில்லு முல்லு இத்திரைப்படத்தில் மாதவிக்கு ஜோடியாக நடித்திருப்பார். தேங்காய் சீனிவாசன்,சௌகார் ஜானகி,விஸ்வநாதன் என பலரும் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டது.