கே எஸ் ரவிக்குமார் கையிலெடுத்த இரண்டாம் பாகம்.. தலைவரே ஒகே சொல்லிட்டாராம்

தன் சொந்த வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை மறப்பதற்காகவோ என்னவோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பல கதைகளுக்கு டிஸ்கஷன் செய்து கொண்டிருக்கிறார். அண்ணாத்த திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி, நெல்சன் உடன் அடுத்த படம் கமிட் ஆகியிருக்கிறார்.

பொதுவாக ரஜினி கதை டிஸ்கஷன் செய்யும் எல்லா நேரமும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அவருடன் இருப்பார். ஏனென்றால் அவர்கள் இருவரும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அப்படி அவர்கள் இருவரும் ரொம்ப நாளாக ப்ளான் பண்ணி கொண்டு இருப்பது அந்த வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தான்.

சிவாஜி, ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் ரஜினிக்கு மட்டுமல்ல அவருடைய ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு திரைப்படம் ஆகும். அந்தத் திரைப்படம் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அதில் ரஜினிக்கு இணையாக நீலாம்பரி என்ற வில்லி கேரக்டரில் மிரட்டி இருந்த அவர் அதன்பிறகு இன்றுவரை அந்த கேரக்டராகவே பார்க்கப்படுகிறார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த திரைப்படத்தை தான் அடுத்த பாகமாக கொண்டுவருவதற்கு ரஜினி ஆசைப்படுகிறார்.

இதனால் கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அவருடைய டீமுடன் டிஸ்கஸ் பண்ணி கொண்டிருக்கிறார். ரஜினியும் அவரிடம் நீண்ட நாட்களாக ஒரு மாஸ் படம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்துள்ளார். அதனால் கேஎஸ் ரவிக்குமார், ரஜினி நெல்சன் படத்தை முடித்து விட்டு வந்தவுடன் இந்த இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று நினைத்திருக்கிறார்.

மேலும் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் இறுதிக்காட்சியில் இறந்தது போல் காட்டி இருப்பார்கள். அதனால் இந்த இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு இணையாக நடிக்க கூடிய அந்த கேரக்டருக்கு நிச்சயம் ஒரு முன்னணி நடிகை தான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.