இன்று நானும் ரவுடிதான் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. விக்னேஷ் சிவனின் சினிமா கேரியரில் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படமாகவும் இது அமைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்தப் படம்தான் அவருக்கு நயன்தாராவை பெற்றுக் கொடுத்தது என்பதையும் மறந்துவிட முடியாது.

விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, பார்த்திபன் என படம் முழுக்க நக்கலும் நையாண்டியும் அதிகமாக உள்ள நடிகர்களை வைத்து செம என்டர்டெயின்மென்ட் படமாக கொடுத்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதை உடனே வெளியில் சொல்லாமல் சில வருடங்கள் கழித்து தான் பொதுமேடையில் அறிவித்தார்கள். அப்போதும்கூட வதந்தியாக இருவரும் காதலிக்கும் செய்திகள் கசிந்து விட்டன. நயன்தாராவுக்கு காதல் வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் பெரிய அளவு பெயரும் புகழும் இல்லாத விக்னேஷ் சிவன் மீது வந்ததுதான் அனைவருக்கும் ஆச்சரியம்.

இன்று விக்னேஷ் சிவனுக்கு கிடைக்கும் பெயர்ப்புகள் அனைத்துக்குமே நயன்தாராதான் காரணம் என்று சொன்னால் மிகையாகாது. இது ஒருபுறமிருக்க விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் நானும் ரவுடிதான் படத்தின் போதே கேரவனில் நெருக்கமாக கட்டியணைத்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

அந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ளார். அப்போதே அப்படி இப்ப சொல்லவா வேண்டும் எனும் அளவுக்கு ரசிகர்கள் அந்த ஜோடியை இலைமறை காயாக கலாய்த்து வருகின்றனர்.

இருந்தாலும் இருவரும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பதால் தான் தற்போது அவர்களுக்கு இந்த உயரம் கிடைத்துள்ளது. இதையே கண்டினியு பண்ணுங்க பாஸ்.