கேஜிஎஃப் யாஷுக்கு அம்மாவாக நடித்த அர்ச்சனாவா இது? வயசை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த கே ஜி எப் 2 திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வசூலை குவித்து வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கிய இந்த திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆஃபிஸில் பல சாதனைகளை முறியடித்துள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் யாஷுக்கு அம்மாவாக நடிகை அர்ச்சனா ஜோய்ஸ் நடித்திருந்தார்.

இந்த படத்தில் மற்ற கேரக்டர்களை காட்டிலும் இவர் மிகச் சில காட்சிகளில் மட்டுமே வருவார். இருப்பினும் இவருடைய கதாபாத்திரம் படத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இவருடைய நடிப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

தற்போது இவரை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது 36 வயதான யாஷுக்கு அம்மாவாக நடித்திருக்கும் இவரின் உண்மையான வயது 27 தான். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் வியப்பில் இருக்கின்றனர்.

இயல்பிலேயே கதக் நாட்டிய கலைஞரான இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். அதன்மூலம் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் மகாதேவி என்ற கன்னட சீரியலில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த இவருக்கு கேஜிஎஃப் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் ஒரு நல்ல அடையாளத்தை பெற்றிருக்கும் அர்ச்சனா தற்போது ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அறிமுகப் படத்திலேயே துணிச்சலாக அம்மா கேரக்டரில் நடித்த இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.