கூட்டுக் குடும்பமாக வாழும் 3 சினிமா நட்சத்திரங்கள்.. இந்த தலைமுறையில் கூட இது சாத்தியமா!

அந்தக் காலகட்டத்தில் எல்லாம் மக்கள் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்றால் பெரிய பாவமாக பார்க்கும் காலம் அது.

ஆனால் காலப்போக்கில் இந்தக் கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் அந்த தலைமுறைகளுடன் மறைந்து விட்டது. இப்பொழுது கூட்டுக் குடும்பம் என்றால் பலரும் வியப்பாக பார்க்கின்றனர். இன்றைய நாகரீக காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வதே பெரிய விஷயம் தான். அப்படி இருக்கும்போது கூட்டுக் குடும்பங்களை எங்கு காண முடியும்.

இதற்கு சற்று விதிவிலக்காக இருக்கும் சில குடும்பங்களும் இன்றும் கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சினிமா துறையிலும் சிலர் இப்படி கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சில பிரபலங்களை பற்றி காண்போம்.

சிவாஜி: தமிழ் சினிமாவின் நடிப்புச் சக்கரவர்த்தி, நடிகர் திலகம் என்று இவரை எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம். சூரக்கோட்டை என்னும் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட அவர் தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்.

இவர் தற்போது மறைந்து விட்டாலும் அந்த பழக்கத்தை அவருடைய மகன்கள் பின்பற்றி வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட நபர்கள் வாழ்ந்துவரும் அவர்கள் வீட்டில் சமைப்பதற்காகவே 15 நபர்கள் இருக்கிறார்களாம். மாளிகை போன்ற அவர்கள் வீட்டில் சாப்பிடுவதற்கு என்று தனியாக பிரம்மாண்டமான உணவு மேஜை இருக்கிறது அதில் தான் அவர்கள் குடும்பமாக எப்போதும் உணவு சாப்பிடுவார்களாம்.

சிவக்குமார்: தமிழ் சினிமாவில் மார்க்கண்டேய நடிகர் என்று அழைக்கப்படும் இவருக்கு சூர்யா, கார்த்தி என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். தற்போது பிரபல நடிகர்களாக இருக்கும் இவர்கள் தன் தந்தையுடன் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் வீட்டில் அனைவருக்கும் மூன்று வேளையும் ஒரே மாதிரியான உணவுகள் தான் செய்யப்படுமாம். பாரம்பரியத்தை பின்பற்றும் சிவகுமார் முடிந்தவரை அனைவரும் ஒன்றாக சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவாராம். அவர் பேச்சை மீறாத அவருடைய பிள்ளைகளும் அந்த பழக்கத்தையே பின்பற்றி வருகின்றனர்.

சமீபத்தில்கூட பொங்கல் திருநாளில் இவர்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

சூரி: மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருகிறார். கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்த இவர் இப்போதும் அனைத்து உறவுகளுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவர் வீட்டில் மட்டும் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள்.

மேலும் இவர்கள் வீட்டில் பெரிய அண்டாவில் தான் சமைப்பார்களாம். சூரி வீட்டில் இருக்கும் சமயத்தில் சமைப்பது, வீட்டு வேலைகளில் பங்கு எடுப்பது என்று மிகவும் ஜாலியாக பொழுதை போக்கி வருவார். இது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம் என்று அவரே ஒருமுறை பேட்டியில் கூறியிருக்கிறார்.

திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறும் இன்றைய தலைமுறைகளுக்கு நடுவில் இதுபோன்ற கூட்டுக் குடும்பங்களாக வசிக்கும் இவர்கள் நமக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்.