குஷ்புவை நாசுக்காக கழட்டிவிட்ட சிவகார்த்திகேயன்.. அந்தரத்தில் தொங்கும் உறவு

சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ந்து பல இயக்குனர்கள் படங்களை இயக்க தயாராகி வருகின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் தனது நட்பு வட்டாரத்தில் இருக்கும் இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து வருகிறார். அதேபோலத்தான் இந்தமுறையும் பல வருடமாக நட்பில் இருந்த நெல்சன் திலீப்குமாருக்கு டாக்டர் படத்தில் இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.

தற்போது டாக்டர் படத்தின் டிரைலர் கூட வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் சிவகார்த்திகேயனுக்கு என்னதான் பல இயக்குனர்கள் வந்து கதையை கூறினாலும்  ஏதாவது ஒரு விஷயத்தை கூறி தவிர்த்து வந்தார். தனது நண்பர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து வருவதால் தற்போது இயக்குனர்கள் பலரும் சிவகார்த்திகேயன் மீது மன வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது.

சமீபத்தில் குஷ்பு சிவகார்த்திகேயனை பார்த்து சுந்தர் சி இயக்கத்தில் நீங்கள் நடிக்கலாமே என கேட்டுள்ளார். இதற்கு சிவகார்த்திகேயன் நாசுக்காக பதிலளித்து மறுத்துள்ளதாக கூறிவருகின்றனர். ஆனால் ஒரு சிலர் சுந்தர் சி சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடிக்கவில்லை அதனாலதான் இவர் பின்பு பார்க்கலாம் என கூறியதாக தெரிகிறது.

ஆனால் குஷ்பூ கண்டிப்பாக என் கணவர் இயக்கத்தில் நீங்கள் ஒரு படம் நடக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் நல்ல கதையாக இருந்தால் கண்டிப்பாக நடிக்கலாம் மேடம் என கூறிவிட்டு சென்றுள்ளார். இதனைக்கேட்ட சுந்தர் சி என் இயக்கத்தில் நடிக்க ஏராளமான நடிகர்கள் காத்துள்ளனர். அப்படியிருக்கும்போது உங்களை எதிர்பார்த்தது தவறுதான் என கூறி இருக்கிறார்.

ஆனால் சிவகார்த்திகேயன் யாரையும் பகைத்துக் கொள்ள மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எப்படி முன்னணி இயக்குனர்களுக்கு ஒரு சில வாய்ப்புகளை கொடுத்துவிட்டு பின்பு தன் நட்பு இயக்குனர்களுக்கு வாய்ப்பு  கொடுத்தாரோ, அதே போல் சுந்தர்.சி க்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து விட்டு அதன் பிறகு தனது நண்பர்களுக்கு படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுப்பார் என கூறி வருகின்றனர்.