குஷ்புக்காக கதையவே மாற்றிய கே.எஸ்.ரவிக்குமார்.. மாஸ் ஹிட்டான படம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் கேஎஸ் ரவிக்குமார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஒருகட்டத்தில் ரஜினிகாந்தை வைத்து முத்து எனும் ஹிட் படம் கொடுத்ததன் மூலம் ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

அதன்பிறகு அவ்வை சண்முகி, படையப்பா மற்றும் மின்சார கண்ணா போன்ற பல படங்களை இயக்கினார். படங்களை இயக்கியதை தாண்டியும் அவர் இயக்கிய படங்களிலேயே அவருக்கு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் நடித்து விட்டு செல்வார் இதுவே அவரது படத்திற்கு ஒரு அடையாளமாக அமைந்தது. இவர் இயக்கிய அனைத்து படங்களும் ஏதாவது ஒரு காட்சியில் நடித்திருப்பார்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் நாட்டாமை. இப்படத்தின் தயாரிப்பாளரான ஆர்பி சவுத்ரிடம் நேரடியாக கேஎஸ் ரவிக்குமார் சென்று படத்தின் கதையை கூறியுள்ளார். படத்தின் கதையை கேட்ட ஆர்பி சவுத்ரி கதை சிறப்பாக இருக்கிறது. ஆனால் இதில் குஷ்புவின் கதாபாத்திரத்துக்கு பெருசா எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

ஆர்பி சவுத்ரி சொன்னதைக் கேட்ட கே எஸ் ரவிக்குமார் உடனே கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்து குஷ்புவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பிளாஷ்பேக் காட்சியில் சரத்குமார் மற்றும் குஷ்பு இருவரும் வருவது போல கதையை அமைத்திருந்தார் இது படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

மேலும் குஷ்பு படத்தில் நடித்ததால் சரத்குமாரின் கதாபாத்திரமும் மெருகேறியது எனக் கூறினார் இந்த மாதிரி ஆர்பி சவுத்ரி சொன்னதால்தான் கதையில் மாற்றங்கள் செய்தேன் அது படத்திற்கும் சரியாக அமைந்தது என தெரிவித்திருந்தார். மேலும் கேஎஸ் ரவிக்குமார் ஒரு சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.