குழாயடி சண்டை போட்ட பாவனி, தாமரைக்கு செம்ம ரைடு விட்ட கமல்.. அப்படியும் வாய் அடங்கல

பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவார்.

எனவே இந்த இரு நாட்களும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களிப்பார்கள். அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் செண்பகமே செண்பகமே டாஸ்கிங் இடையில் பாவனி ரெட்டி மற்றும் தாமரை இருவரும் குழாயடி சண்டை போட்டுக்கொண்டதை பார்த்த ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

எனவே இவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று உலக நாயகன் கமலஹாசன் தாமரை மற்றும் பவானி ரெட்டி இருவரையும் கண்டித்தார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் கண்ணியத்துடன் விளையாடுங்கள்  என்றும தடித்த வார்த்தைகளையும் வரம்பு மீறிய செயல் களையும் செய்வதைத் தவிருங்கள் என்று தாமரை மற்றும் பாவணி இருவரையும் கமலஹாசன் செம்ம ரைடு விட்டார்.

அதன்பிறகும் அவரை தங்கள்மீது இருக்கும் குற்றத்தை உணராமல் கமல் முன்பே இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு  சண்டையை மேலும் மேலும் வளர்த்தார். ஒருகட்டத்தில் கமலுக்கே கோபம் வரும் அளவு இருவரும் தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தாமரையிடம் உங்கள் மகன் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் என்ன நினைப்பார் என்று கொஞ்சம் யோசித்து விளையாடுங்கள் தாமரைக்கு கமல் அறிவுரை கூறினார்.

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் எல்லை மீறிய போது அவர்களை சரியான நேரத்தில் சரியான விதத்தில் கண்டிப்பது, மீடியாவில் கமலுக்கு எக்கச்சக்கமான பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மன அழுத்தத்தால் அவதிப்படும் பிரபல நடிகை.. இன்னும் ஒரு வருடத்தில் திருமணமாம்.!

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தில் அறிமுகமானார் தமன்னா. இதற்கு முன்னதாக தெலுங்கு,ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். கேடி படத்தில் அறிமுகமானாலும் கல்லூரி படத்தில் ஹீரோயினாக நடித்தார். கல்லூரி படத்திற்கு பிறகு தமன்னாவுக்கு  தமிழில் பட வாய்ப்புகள் ...
AllEscort