குழந்தை வருகைக்காக காத்திருக்கும் 3 சீரியல் வில்லிகள்.. நீங்க இல்லாம சீரியல் டிஆர்பி போச்சு

சின்னத்திரையில் வில்லியாக நடித்த நடிகைகள் தற்போது தங்களது குழந்தையின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சின்னத்திரை தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது சில நடிகைகள் கர்ப்பமானால் அந்தக் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை மாற்றிவிடுவார்கள். இதனால் சில நடிகைகள் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு தங்கள் குழந்தைக்காக காத்திருக்கும் சின்னத்திரை நடிகைகளை பார்க்கலாம்.

நீலிமா ராணி: தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நீலிமா ராணி. பிறகு தமிழ் மற்றும் மலையாள சின்னத்திரை தொடர்களில் நடித்தார். இவர் நடித்த மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி பெரிய அளவில் இவரை வெளிக்கொண்டு வந்தது. கடைசியாக அரண்மனைக்கிளி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். நீலிமாவிற்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது கர்ப்பமாக உள்ள நீலிமாவிற்கு ஜனவரி 2022ல் குழந்தை பிறக்கப் போவதாக இன்ஸ்டாகிராமில் அவரே பதிவிட்டு இருந்தார்.

ஜெனிஃபர்: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் முத்தம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜெனிஃபர். அதற்கு முன்பு பல படங்களில் சில காட்சிகளில் நடித்துள்ளார். பிறகு நிறைய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஜெனிபருக்கு 2007 இல் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடிக்கத் தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான குஷ்புவின் லட்சுமி ஸ்டோர் தொடரில் கமலா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ளதால் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். ரேஷ்மா தற்போது ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜெனிபருக்கு ஷாந்தனவ் என்ற மகன் உள்ளார்.விரைவில் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது.

ஃபரினா ஆசாத்: ஆரம்பத்தில் சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சின்னத்திரை தொடர்களில் நடிக்க தொடங்கியவர் தான் ஃபரினா ஆசாத். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்கு ஃபரீனாவுக்கு உண்டு.

இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் பாரதிகண்ணம்மா தொடரில் இருந்து விலகாமல் தற்போது வரை நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக உள்ள ஃபரினா இன்னும் ஓரிரு நாட்களில் குழந்தை பிறக்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்த்துகிறார்கள்.