குழந்தை பெற்றும் உச்சத்திலிருந்த 2 நடிகைகள்.. போட்டிக்கு போட்டியாக இருந்த சக நடிகை

தமிழ் சினிமாவில் திருமணத்துக்குப் பிறகு நடிகைகளின் மார்க்கெட் குறையும் என்பது பலராலும் பேசப்படுகிறது. நடிகைகளின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறையும், அவர்களது மார்க்கெட் பாதிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் திருமணமாகி குழந்தை பெற்றும் மார்க்கெட்டை இழக்காமல் சாதனை படைத்த இரு நடிகைகள் உள்ளார்கள்.

ஸ்ரீதேவி: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 80களில் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி. கமல், ரஜினி என முன்னணி நடிகர்களின் கதாநாயகியான ஸ்ரீதேவி தயாரிப்பாளரான போனி கபூரை 1996 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளார்கள். திருமணமாகி 14 வருடங்கள் கழித்து இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் கால்பதித்தார்.

இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. இப்படம் ஸ்ரீதேவி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்புத் திறமைக்காக 2013 ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் நடித்த நம் நாடு, மூன்று முடிச்சு, காயத்ரி, கவிக்குயில், முடிசூடா மன்னன், பைலட் பிரேம்நாத், மூன்றாம் பிறை ஆகிய படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

ஹேமமாலினி: 1963இல் இது சத்தியம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹேமமாலினி. நாட்டியக் கலையில் வல்லவரான ஹேமமாலினி பல நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். முன்னணி நடிகையாக இருந்த ஹேமமாலினி 1970இல் தும் ஹஸின் மெயின் ஜவான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது தாமோதரா மீது காதல் ஏற்பட்டது. பத்தாண்டுகள் கழித்து 1980 இல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு இஷா, அஹானா என இரு மகள்கள் உள்ளார்கள். ஹேமா மாலினி 2002இல் கமலுடன் ஹேராம் படத்தில் நடித்திருந்தார். 1999ல் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகி 2004ல் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். தற்போது அவரது மகள் ஹிந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தியா சினிமாவுக்கே அப்பனுக்கு அப்பனாக மாறிய மணிரத்தினம்.. 29 வருடங்களுக்கு முன்பே நடந்த ஆச்சர்யம்!

இந்திய சினிமாவில் ஒரு புதிய யுக்தியாக பான் இந்தியா படங்கள் அதிகமாக வெளியாகி வருகிறது. இயக்குனர்களும்,ஹீரோக்களும் அதையே தான் விரும்புகின்றனர். இந்திய அளவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் படம் வெளியாகும் போது எளிதாக இந்திய ...