குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த மீனாவின் 5 படங்கள்.. நடிப்பை வியந்து பாராட்டிய ஹீரோக்கள்

மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர். தன்னுடைய கண்களால் பல ரசிகர்களை கவர்ந்தவர் மீனா. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மீனா. பல முன்னணி நடிகர்களின் கதாநாயகியாக நடித்த மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களை பார்க்கலாம். குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே தனது நடிப்பில் முன்னணி நடிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு திறமை கொண்டவர்தான் மீனா. இவர் நடிப்பை பார்த்து ரஜினி மற்றும் சிவாஜி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சங்கள்: மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1982ல் வெளிவந்த திரைப்படம் நெஞ்சங்கள். இப்படத்தில் சிவாஜி கணேசன், விஜயகுமார், மஞ்சுளா விஜயகுமார், தியாகராஜன், மேஜர் சுந்தர்ராஜன், லட்சுமி, மனோரமா, மீனா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் விஜயகுமாரின் மகள் பாலா ஆக மீனா அறிமுகம் ஆகியிருந்தார்.

எங்கேயோ கேட்ட குரல்: எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1982-ல் வெளியான திரைப்படம் எங்கேயோ கேட்ட குரல். இப்படத்தில் ரஜினிகாந்த், அம்பிகா, ராதா, மீனா என பலரும் நடித்து இருந்தார்கள். இப்படத்தில் ரஜினிகாந்த், அம்பிகா குழந்தையாக மீனா என்ற கதாபாத்திரத்தில் மீனா நடித்திருந்தார்.

சுமங்கலி: யோகானந்த் தயாரிப்பில் 1983 இல் வெளியான திரைப்படம் சுமங்கலி. இப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, பிரபு, ஒய் ஜி மகேந்திரன், சில்க் ஸ்மிதா என பலரும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் சிவாஜி, சுஜாதாவின் மகளாக ராமதுளசி கதாபாத்திரத்தில் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அன்புள்ள ரஜினிகாந்த்: 1984 ஆம் ஆண்டு கே நடராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அன்புள்ள ரஜினிகாந்த். இப்படத்தில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் ரோஸி என்ற மீனா கதாபாத்திரம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் ரஜினி அங்கிள் என்ற மழலை குரலில் மீனா அழைப்பது நம்மால் மறக்க முடியாது. இப்படத்தில் கருணை உள்ளமே ஓர் கடவுள் இல்லமே என்ற இளையராஜாவின் பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

உயிரே உனக்காக: கே ரங்கராஜன் இயக்கத்தில் 1986 இல் வெளியான திரைப்படம் உயிரே உனக்காக. இப்படத்தில் மோகன், நதியா, சுஜாதா, விஜயகுமார், செந்தில், கோவை சரளா, மீனா என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் நதியாவின் சிறுவயது விஜயநிர்மலாதேவி கதாபாத்திரத்தில் மீனா நடித்திருந்தார்.

பழையபடி முருங்க மரம் ஏறும் வேதாளம்.. சிம்பு மீது கடும் கோபத்தில் ஐசரி கணேஷ்

சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, கொரோன குமார் என வரிசையாக மூன்று படங்கள் வைத்திருக்கிறார். வெந்து தணிந்தது காடு படம் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துள்ளது. அதன்பின் கொரோன குமார் படம் ஆரம்பிக்கும் ...