நடிகை பவானி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி முழுமையாக கூறியுள்ளார். நான் நிறைய வேலைகளை செய்தேன் ஆனால் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. பின்னர் ஒரு விளம்பரத்தை பார்த்து ஆடிசனுக்காக போட்டோ ஷூட் எடுக்கப் போனேன் நடிப்பைக் முறையாக கற்றுக் கொள்ளச் சொன்னார்கள். பின்னர் அதையும் நான் கற்றுக் கொண்டு திரைப்படங்களுக்கு முயற்சி செய்தேன்.

அப்போது டான்ஸராக இருந்த பிரதீப்பை காதலித்து எங்கள் வீட்டு எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறினேன். திரைப்படங்களுக்காக காத்திருக்காமல் இருவரும் ஒரே சீரியலில் நடிக்க ஆரம்பித்தோம். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நாங்கள் பின் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் கர்ப்பம் தரித்த போது உடல்நிலை காரணமாக கரு கலைந்து விட்டது என்று அவர் கூறியுள்ளார்.

என் கூட பிறக்காத அண்ணனின் பிறந்தநாளுக்காக எங்கள் வீட்டிற்கு அவரை வரவழைத்தோம். அப்பொழுது எனது கணவர் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார். மேலும் சிகரெட் பிடிக்க சென்ற போது நான் வேண்டாம் என்று தடுத்தேன் இதனால் கோபம் அடைந்த அவர் வீட்டை விட்டு காரில் சென்று விட்டார்.

சிறிது நேரத்திற்குப் பின் வந்த அவரிடம் ஏன் போன் எடுக்கல உனக்காக நான் எல்லாரையும் விட்டுட்டு வந்திருக்கேன் என சண்டையிட்டதாக  கூறினார். வாக்குவாதத்தில் பிரதீப் கோபமாக ரூமில் சென்று கதவை லாக் செய்து விட்டதாகவும் தன்னை பயமுறுத்த அவர் இவ்வாறு செய்வதாக நினைத்து பவானி ஹாலில் தூங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.

காலையில் எழுந்து கதவை தட்டும் போது கதவு திறக்காததால் பக்கத்து ரூமில் இருந்த தன் அண்ணனிடம் கூறியுள்ளார். அப்பொழுது இருவரும் கதவை உடைத்து பார்க்கும் பொழுது மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு இறந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் இரு வீட்டாருக்கும் போன் செய்து கூறினேன்.பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது பிரதீப் இறந்ததற்கு நான் என் அண்ணாவுடன் தவறாக இருந்ததை பார்த்ததால் தான் பிரதீப் தூக்கிட்டு கொண்டதாக செய்திகள் பரவ ஆரம்பித்தது. ஆனால் போலீசார் என் மேல் எந்த தவறும் இல்லை என்று கூறி அனுப்பினர்.

அதன்பிறகு இன்றுவரை என் கணவரின் குடும்பத்தினர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். மேலும் என் கணவர் இப்பொழுது திரும்பி வந்தால் அவரை அறைய வேண்டும் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.