குழந்தையை கொஞ்சி விளையாடும் ஸ்ரேயா.. 39 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான சிவாஜி மற்றும் கந்தசாமி திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஸ்ரேயா நடிப்பில் மட்டுமின்றி நன்றாக டான்ஸ் ஆடவும் செய்வார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ராய் கோசிவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்குப் பின்னர் ஸ்ரேயா நடிப்பில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.

தற்போது குழந்தை பிறந்த பின்பு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர் ஆர் ஆர் படத்தில் ஸ்ரேயா நடித்துள்ளார்.

இது தவிர தமிழில் நரகாசுரன் என்ற படத்திலும், ஹிந்தியில் தட்கா என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்த பட வாய்ப்புக்காக காத்திருக்கும் ஸ்ரேயா தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்.

குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை ஸ்ரேயா தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவுக்கு ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. வயது கூடினாலும் இன்னும் அதே இளமையுடன் இருக்கும் ஸ்ரேயாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று ரசிகர்கள் ஏக்கத்தில் தான் உள்ளனர்.

தற்போது தன் கணவர் மற்றும் குழந்தையுடன் ஸ்பெயினில் வசித்து வரும் ஸ்ரேயா பட வாய்ப்புக்காக மீண்டும் இந்தியா வர திட்டமிட்டு உள்ளார். குழந்தையுடன் விளையாடும் ஸ்ரேயா