குடும்ப குத்து விளக்கு படத்துக்கு மட்டும்தானா.. அல்ட்ரா மாடர்ன் உடையில் ஜெய்பீம் பட நாயகி

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வரும் படம் ஜெய்பீம். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

நடிகர் சூர்யா இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்து வருகிறார். அறிவியல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த படங்களில் நடித்து வரும் சூர்யா இந்த படத்தில் பழங்குடியின பெண்ணிற்காக போராடுபவராக நடித்துள்ளார்.

இதில் பழங்குடியின பெண்ணாக நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இவர் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில் நடித்தவர். அதில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு அக்காவாக நடித்திருப்பார். ஜெய்பீம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் லிஜோமோல் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு பழங்குடி பெண்ணாகவே மாறி உள்ளார். பழங்குடி மக்களின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாக இதில் காட்டியுள்ளனர். இது ஓர் விழிப்புணர்வு படமாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்தப்படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. தற்போது லிஜோமோல் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதைப்லிஜோமோல் பார்த்த ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.