குடியும் குடுத்தனுமாக சென்ற ஸ்ரேயா.. புகைப்படத்துடன் உறுதி செய்த கணவர்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அறுபது படங்கள் வரை நடித்த ஸ்ரேயா. பிறந்தது உத்ரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் தான். தெலுங்கு படம் ஒன்றில் 2001-ல் நடிக்க துவங்கிய அம்மணி தமிழ் பக்கம் வந்தது எனக்கு 20 உனக்கு 18 என்கிற படத்தின் வாயிலாய் தான்.

தொடர்ந்து ரஜினி, விஜய், தனுஷ், விஷாலுடன் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றார் ஸ்ரேயா சரண். கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை சென்று தன் நடன அசைவுகளால் காய் நகர்த்தி வந்தார்.

ஐட்டம் சாங் தேவைப்படாத அளவிற்கு கவர்ச்சியை அள்ளித்தரும் கவர்ச்சிக்கடல் சில வருடங்களாக படவாய்ப்பு இல்லாமல் போனது. அவ்வப்போது பாலிவுட் பக்கம் தலைகாட்டி வந்த ஸ்ரேயா 2018-ல் விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்து ஸ்பெயினில் வசித்து வந்தார்.

திரையில் கொண்டாடப்பட்ட நடிகை திடீரென மாற்று நாட்டுக்கு செல்லவே எதிர்பாராத ரசிகர்களுக்கு சற்றே வருத்தம் தான்.

இந்தியாவில் வீடு வாங்கி குடியேற வேண்டும் என்கிற கனவோடு இருந்த ஸ்ரேயா இப்போது மும்பையின் பாந்திரா நகரில் வீடு வாங்கி குடியேறியுள்ளார். திருமணம் முடிந்து இத்தனை நாளில்  இப்பொழுதுதான் சொந்த வீட்டிற்கு குடியும் குடுத்தனுமாக மொத்தமாக செல்கிறாராம் ஸ்ரேயா. அதனையும் அவரது கனவரே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ராசியில்லை என முத்திரை குத்தப்பட்ட பூஜா ஹெக்டே.. அசால்டாக அவரின் இடத்தை தட்டிப்பறித்த இளம் நாயகி

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா ஹெக்டே சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அந்த திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ...