குடித்துவிட்டு இயக்குனருடன் சண்டை போட்ட பயில்வான்.. அசிங்கமும், அருவருப்பும் பப்ளிசிட்டிக்காகவா?

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அஞ்சலி பாட்டில் நடிப்பில் உருவான குதிரைவால் என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படத்திற்கு ஜி ராஜேஷ் கதை எழுத மனோஜ் மற்றும் ஷியாம் சுந்தர் இருவரும் இயக்கியுள்ளனர்.

அறிமுக இயக்குனர்கள் இயக்கியுள்ள இந்த திரைப்படம் கடந்த வருடம் நடைபெற்ற இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை நடிகர் பயில்வான் ரங்கநாதன் பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி பிரபலமடையும் சில நபர்களில் பயில்வான் ரங்கநாதனும் ஒருவர். அடுத்தவர் அந்தரங்கத்தை பற்றி பேசினால் பெரிய ஆளாகி விடலாம் என்று தவறாக நினைத்து தற்போது மீடியாவில் கண்டதையும் உளறி வருகிறார்.

இதற்கு பார்வையாளர்களிடமிருந்து பல எதிர்ப்புகளும் கிளம்புகிறது. இதையெல்லாம் பார்த்த பயில்வான் ஆகா நம்ம பேமஸ் ஆகிவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு தற்போது பார்ப்பவர்களிடம் எல்லாம் வம்பு செய்வதையே வேலையாகக் கொண்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது குதிரைவால் பட இயக்குனர்கள் மாட்டியுள்ளார்கள்.

அவர்களிடம் பயில்வான் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியும் அதை ஏன் இப்படி வைத்தீர்கள், மெண்டல் மாதிரி இருக்கு என்று குதர்க்கமாக கேள்வி கேட்டுள்ளார். அவரின் கேள்விக்கு படக்குழுவினரும் பொறுமையாக பதில் சொல்கின்றனர். ஆனாலும் விடாத பயில்வான் நீ சொல்லு, நீ சொல்லு என்று மாறி மாறி கேள்வி கேட்டு டார்ச்சர் செய்கிறார். இந்த மாதிரி அசிங்கமாகவும், அருவருப்பாகவும் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளாராம் பயில்வான்.

ஒருவழியாக அவர்களும் அவரை சமாளித்து அனுப்பி வைக்கின்றனர். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கேள்வி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு, குடிபோதையில் உளறாதே என்று பயில்வானை கண்டபடி திட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.