குடிச்சுட்டு கூத்தடிக்கும் தம்பி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பேரே கெட்டு போச்சு!

விஜய் டிவியின் கூட்டுக்குடும்ப சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பிகள் சேர்ந்து பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ் என்ற டிபார்ட்மென்ட் கடையை கோலாகலமாக திறந்து வைத்திருக்கின்றனர்.

இதனால் சந்தோசமடைந்த குடும்பத்தினர் கடைக்கு வரும் அனைவருக்கும் இனிப்பை கொடுத்த தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மறுபுறம் தனத்தின் அண்ணன் மற்றும் முல்லையின் அப்பா இருவரும் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர் வீட்டிலேயே குடிக்கின்றனர்.

மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் ஆகியோர் இவர்களுடன் சேர்ந்து குடிக்காவிட்டாலும் அந்த இடத்தில் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து மது அருந்துவதற்கு ஆதரவு தெரிவிப்பது சீரியல் ரசிகர்களிடம் கண்டனத்தை எழுப்புகிறது. அத்துடன் மூர்த்தியின் மூத்த தம்பியான ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடித்துவிட்டு கூத்து அடிக்கிறார்.

மேலும் போதை தலைக்கேறிய ஜீவாவை மாமனார் வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்து இறக்கி விடுகிறார்.போதை ஏரிய ஜீவா செய்யும் அலப்பறையை பார்த்த மீனா ஷாக்காகி நிற்கிறார்.

மற்ற சீரியல்களை விட கூட்டு குடும்பத்தின் அருமையையும் பெருமையையும் பறைசாற்றிக் கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது குடியும் கூத்தடிக்கும் அண்ணன் தம்பிகளை பார்த்த சீரியல் ரசிகர்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் இந்த சீரியலுக்கு இருந்த தனி மதிப்பும் மரியாதையும் கெட்டுவிட்டது.