கீழே விழுந்த கேமராமேனை தாங்கி பிடித்த விஜய்.. சிவப்பு கார், கருப்பு மாஸ்க்கில் தளபதி புகைப்படங்கள்

நீலாங்கரையில் இன்று ஓட்டு போடுவதற்காக காலையில் வந்த விஜய்யை பார்த்து வழக்கம் போல் ரசிகர்கள் கூட்டம் பொய்த்தது. ஓட்டுச்சாவடியில் சில நேரம் சலசலப்பு ஏற்பட்டு அதன் பின் போலீசார் வந்து ஓரளவு சமாளித்து விட்டனர்.

கூட்ட நெரிசல் தள்ளு முள்ளு ஏற்பட ஒரு கேமராமேன் கீழே விழப் பார்த்தார். சட்டென்று சுதாரித்த தளபதி விஜய் அவரைத் தாங்கிப் பிடித்து தூக்கிவிட்டார். விஜய் சுதாரிப்பாக செயல்பட்டதை பார்த்த அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

சென்ற முறை நாடாளுமன்ற தேர்தலில் நீலாங்கரை வீட்டில் இருந்து மிதிவண்டியில் வந்து தனது ஓட்டை பதிவிட்ட விஜய், இந்த முறை காரில் வந்தார். சென்றமுறை சிகப்பு கலர் சைக்கிள், கருப்பு கலர் மாஸ்க்.

இந்த முறையும் சிகப்பு கலர் கார், கருப்பு கலர் மாஸ்க். இதை கவனித்த ரசிகர்கள் தளபதி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் சப்போர்ட் பண்ணுகிறார் என அவிழ்த்துவிட்டு வருகின்றனர்.