கிராபிக்ஸ் மூலம் சிம்புவை ஒல்லியாக காட்டிய வெங்கட் பிரபு.. அந்த சீனை பார்த்தா உங்களுக்கே தெரியும்

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம் ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் எடிட்டிங்கை பிரவின் K.L கையாண்டுள்ளார். ஏற்கனவே மாநாடு படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. புதுவிதமான கதை களத்தில் டைம் லூப் பாணியில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சிம்பு நடிப்பில் ஒரு நல்ல படம் வெளியாக உள்ள மகிழ்ச்சியில் அவரது ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் மாநாடு படம் நிச்சயம் சிம்புவிற்கு வெற்றி படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் மாநாடு படம் குறித்து செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மாநாடு படத்தில் நடிகர் சிம்புவை சிஜி எபெக்ட் மூலம் ஒல்லியாக காட்டி உள்ளார்களாம். மாநாடு படம் உருவான சமயத்தில் தான் நடிகர் சிம்பு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் மாநாடு படத்தின் பாடல் காட்சி ஒன்றின் முதல் பாதியில் சிம்பு பயங்கர குண்டாக காட்சியளித்துள்ளாராம். அந்த பாடல் காட்சியை மீண்டும் படப்பிடிப்பு நடத்தினால் அதிகளவில் செலவாகும் என்பதால் சிஜி எபெக்ட் மூலம் சிம்புவை ஒல்லியாக காட்டி உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் பாகுபலி படத்திலும் அனுஷ்காவை சிஜி எபெக்ட் மூலம் ஒல்லியாக காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிதியின் ஆட்டத்தை கண்டு மிரண்ட விருமன் படக்குழு.. சும்மா பட்டைய கிளப்பிட்டாராம்….!

கோலிவுட்டில் ஏற்கனவே இருக்கும் வாரிசு நடிகர்கள் வரிசையில் கடந்த ஆண்டு இணைந்தவர் தான் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர். இவர் தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ...
AllEscort