கிராபிக்ஸ் காளையை வைத்து ஏமாற்றிய முத்தழகு.. கடனுக்கு மாடு கூட வாங்க முடியாத விஜய் டிவி கலாச்சாரம்

விஜய் டிவி முத்தழகு என்ற புதிய சீரியலை விரைவில் தொடங்க இருக்கிறது. புதுமுக ஹீரோ, ஹீரோயின் நடிக்கும் இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

முத்தழகு என்ற பெயரைக் கேட்டவுடன் பருத்திவீரன் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. இந்தப் ப்ரோமோவில் ஆரம்பத்தில்  ஹீரோயின் முத்தழகு தனியாக வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு ஓடி வரும் ஒரு சிறுவன் அக்கா உங்க காளையை ஓட்டிட்டு போறாங்க என்று கூறுகிறான். அதைக் கேட்டு பதறிப் போய் ஓடி வரும் ஹீரோயின் சம்பந்தப்பட்டவர்களிடம் காளையை விடுமாறு கேட்கிறார்.

அப்பொழுது காளையை பார்த்த நமக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஒரிஜினல் காளை மாடு இல்லாமல் கிராபிக்ஸில் காட்டப்பட்டு இருந்தது. விவசாயிகளின் மிகப்பெரிய பலமே காளை மாடு தான்.

அதைக்கூட ஒரிஜினலாக காட்ட முடியாமல் கிராபிக்ஸில் காட்டுகிறது இந்த சீரியல். அந்த ப்ரோமோ சீரியலில் காளையை கூட்டிட்டு போவதே கடன் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்க முடியாததால் தான். இதைப்பார்த்த ரசிகர்கள் கடன் வாங்கி கூட உண்மையான காலையை காட்ட முடியவில்லையே விஜய் டிவிக்கு என்பது போன்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதில் கலாச்சாரத்தைப் பற்றி தண்டோரா போடுகிறது விஜய் டிவி. ஊருக்குத்தான் உபதேசம் போல தெரிகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் புரோமோவே இப்படி இருக்கே, சீரியல் எப்படி ரியலாக இருக்கும் என்று கலாய்க்கிறார்கள்.

பீஸ்ட் பட 100வது நாள் புகைப்படத்தை வெளியிட்ட நெல்சன்.. கெத்து காட்டும் தளபதி விஜய்

என்னதான் மழை, புயல், வெள்ளம் வந்தாலும் அது ஒரு ஓரமா வந்துட்டு போகட்டும் எங்களுக்கு மூவி அப்டேட் தான் முக்கியம்னு நினைக்கிற பலர் இருக்காங்க. அவங்களுக்காகவே அடுத்தடுத்து படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன ...
AllEscort