கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ஒரே சன் டிவி சீரியல்.. எப்படினு கேட்டாலே ஷாக்கா இருக்கு

சினிமாவைத் தாண்டி சீரியலில் கின்னஸ் சாதனை படைப்பது என்பது எளிதான காரியமல்ல. ஆனால் சீரியலில் கின்னஸ் சாதனை படைத்து உள்ளார் இயக்குனர் திருமுருகன்.

சன் டிவியில் ஒளிபரப்பான அந்த பிரம்மாண்ட சீரியலுக்கு தற்போது ரிப்பீட் மோடில் பார்ப்பதற்கு கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். குடும்பப்பாங்கான இந்த சீரியலை மக்கள் இன்றளவும் பாராட்டித்தான் வருகின்றன.

சன் டிவியில், திருமுருகன் இயக்கத்தில் திருமுருகன், மௌலி, பூவிலங்கு மோகன் மற்றும் 90 சதவீத புதுமுக நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்ட தொடர் நாதஸ்வரம். இத்தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

வெற்றிகரமாக ஓடிய நாதஸ்வரம் தொடரின் 1000 வது எபிசோடை நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 2014இல் மார்ச் 5ம் தேதி காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூரில் இந்த காட்சி எடுக்கப்பட்டது.

இப்படப்பிடிப்பின் தளத்தில் இருந்த போதே பின்னணி இசையை நேரடியாக சஞ்சீவ் ரத்தன் இசையமைத்திருந்தார். நாதஸ்வரத்தில் 1000வது எபிசோட் கின்னஸ் சாதனை பெற்றது.