கின்னஸ் சாதனை படைக்கப் போகும் பாக்யா.. முட்டுக்கட்டை போட்ட உத்தம புருஷன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது அதிரடி திருப்பங்களுடன் வரக் காத்திருக்கிறது. அதாவது ராதிகாவுக்காக பாக்யா மீண்டும் சமையல் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார் கோபி. ஆனால் பாக்கியா சமையலை வாங்க யாரும் தற்போது தயாராக இல்லை.

இந்நிலையில் வீட்டில் ஒரு விருந்தினர் வருகிறார் என்பதால் பாக்யா தடபுடலாக பல வகையான சமையல் செய்து வைத்துள்ளார். இதைப் பார்த்து ஆச்சரியமடைந்து பாக்கியாவால் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு சமைக்க முடியும் என எழில் கேட்டுள்ளார். இந்நிலையில் பாக்கியா ஒரு மணி நேரத்தில் 100 வகையான சமையலை செய்ய முடியும் என கூறியுள்ளார்.

இதை வைத்து ஒரு ரெக்கார்ட் பிரேக் செய்யலாம் என யோசனை கூறியுள்ளார். இதைப்பற்றி கோபியிடம் ராதிகா, டீச்சர் 100 வகையான உணவுகளை ஒரு மணி நேரத்தில் சமைக்க போகிறார் என கூறுகிறாள். உடனே கோபி என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கா என மனதுக்குள்ளேயே பேசிக் கொள்கிறார். மேலும் இது மாதிரி ஒரு மணி நேரத்தில் 100 டிஷ் சமைக்கிறது கஷ்டம் என கோபி கூறுகிறார்.

ராதிகா, பாக்கியா டீச்சர் அதெல்லாம் செஞ்சுருக்காங்க என உறுதியாகக் கூறுகிறார். மேலும் கோபி வீட்டிற்கு வந்து சாப்பிடும் போது இதைப்பற்றி பாக்கியா கூறுகிறாள். உன்னால கண்டிப்பா முடியாது அவ்வளவு பேர் முன்னாடி அசிங்கப்பட்ட தான் நிற்க போறேன் என்றான் கோபி கூறுகிறார்.

இதுவே ராதிகா ஏதாவது சாதனை படைக்கப் போகிறேன் என்று சொன்னால் உடனே வாரிவரிந்து கொண்டு ஓடி வரும் கோபி சொந்த பொண்டாட்டி பாக்யாவின் சாதனைக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். மேலும் கோபி இப்படி சொன்ன உடனே சாப்பாட்டு தட்டை தூக்கி வீசுகிறார் கோபியின் அப்பா.

மேலும் இனியா மற்றும் செழியன் இருவரும் பாக்யாவுக்கு எதிராகவே பேசி வருகிறார்கள். ஆனால் எழில் துணையோடு பாக்யா இந்த சாதனையைச் செய்தே ஆகவேண்டும் என உறுதியாக உள்ளார். இதனால் பாக்கியாவிற்க்கு அடுத்து என்னென்ன பிரச்சனை வரப் போகிறது என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.