கிண்டலா பண்றீங்க இப்போ வாங்கடா.. அடுத்த படத்தில் அஜித் கொடுக்க போகும் பதிலடி

அஜித்தின் வலிமை படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் என்னவாக இருக்கும் அந்த படத்தின் இயக்குனர் யாராக இருப்பார் என்ற பல்வேறு கேள்விகள் சினிமா வட்டாரத்தில் இப்போதே எழுந்து இருக்கிறது. அதற்கு காரணம் வலிமை திரைப்படத்தின் விமர்சனங்கள் தான். தற்போது அடுத்து ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அஜித் குமார் அவர்கள்.

இப்படி இருக்கையில் வலிமை படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் தற்போது அஜித் குமார் அடுத்த படத்திற்கான வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். ஆனால் யாரும் எதிர்பாராத ஒரு கூட்டணி அமையப்போகிறது என்ற ஒரு தகவல் தற்போது கசிந்திருக்கிறது. வலிமை படத்திற்கு பிறகு அஜித் வினோத் கூட்டணி செட் ஆகவில்லை. அதனால் மீண்டும் அஜித் இயக்குனர் வினோத் பக்கம் செல்ல மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் இயக்குனர் வினோத்தோடுதான் இணைய இருக்கிறார் அஜித் குமார்.

ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பேரதிர்ச்சியாக இருந்தாலும் இதற்கு முன்னால் வந்த நேர்கொண்டபார்வை ஒரு ரீமேக் படமாக ஆகிவிட்டது. இந்த வலிமை திரைப்படம் வினோத்தின் கதையே இல்லை அவரின் விருப்பப்படி எடுக்கவில்லை என்று பல சர்ச்சைகளும் வந்து அதுவும் அவருக்கு திருப்திகரமான படமாக இல்லாமல் போய்விட்டது. அதனால் இந்த இரண்டு படங்களுக்கு முன்னால் வினோத் அஜித்திடம் சொன்ன கதைதான் இந்த AK61 என்று கூறப்படுகிறது.இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் , இந்த படத்திற்காக அவர் தன்னுடைய எடையை 25 கிலோ வரை குறைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. உண்மையாகவே இதுதான் வினோத்தின் கதை என்றும் இனிமேல் தான் வினோத் தன்னுடைய இயக்கத்தை காட்டப் போகிறார் என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

வலிமை படத்தை வைத்து வினோத்தை குறைவாக மதிப்பிட வேண்டாம் அவருடைய முந்தைய படங்களைப் பார்க்கும்போது இந்த வலிமை படத்தின் விமர்சனங்களுக்கு பின்னால் ஏதோ ஒன்று ஒழிந்திருக்கிறது என்று அவரை நன்கு அறிந்தவர்கள் கூறிவருகின்றனர். வலிமை திரைப்படத்தின் விமர்சனங்களால் நொந்துபோய் இருக்கக்கூடிய அஜித் ரசிகர்களுக்கு தற்போது பூஸ்ட் குடித்தது போல இந்த தகவல் கிடைத்திருக்கிறது.

அதுவும் அஜித் இரட்டை வேடம் , 25 கிலோ எடை குறைப்பு என்று சொல்லியவுடன் அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்திற்கே சென்று விட்டனர். திரும்ப வரோம் எங்கள பார்த்து சிரிச்சவன், ஒவ்வொருத்தன் முகத்திலும் கரியைப் பூசுறோம் என்று இந்த தகவலை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றன.