கிசுகிசுவால் திருமணம் செய்த கோலிவுட் நட்சத்திரங்கள்.. ஜோதிகா முதல் சாய்ஷா வரை

சினிமா நடிகைகள் படப்பிடிப்பின் போது தங்களுடன் படிக்கும் சக நடிகர் காதல் வயப்படுகிறார்கள். அதன் பின் இருவரும் காதலித்து ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க சில கிசுகிசுக்கள் ஆல் இணைந்த ஜோடிகளும் உண்டு. அவ்வாறு தன் காதலனை மணந்த கோலிவுட் நட்சத்திரங்களை பார்க்கலாம்.

குஷ்பூ, சுந்தர் சி : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. சுந்தர் சி தான் இயக்கிய முதல் படமான முறைமாமன் படத்தில் குஷ்பூ கதாநாயகியாக நடித்திருந்தார். சுந்தர் சி இக்கு குஷ்பூ மேல் காதல் ஏற்பட்டுள்ளது. குஷ்புவும் இவரது காதலை ஏற்றுக் கொள்ள 2000 இல் இவர்களுக்கு திருமணம் நடந்தது. சுந்தர் சி குஷ்பூ இருவருக்கும் அனந்திகா, அவந்திகா என இரு மகள்கள் உள்ளனர்.

ஷாலினி, அஜித் : அமர்க்களம் படத்தில் அஜித், ஷாலினி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. அதன் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் 2000 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளார்.

ஜோதிகா, சூர்யா : பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களில் சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து 2006 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளார்.

சினேகா, பிரசன்னா: அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் சினேகா, பிரசன்னா இருவரும் நட்பாக பழகி வந்தனர். அதன்பிறகு ஒருகட்டத்தில் இருவரும் காதலித்து 2012 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளார். திருமணத்திற்கு பிறகு இடைவெளி எடுத்து மீண்டும் சினேகா படங்களில் நடித்து வருகிறார்.

பிரியா, அட்லி : இயக்குனர் அட்லியும், நடிகை பிரியாவும் பல வருடமாக நட்பாக பழகி வந்தனர். அதன் பிறகு பத்து வருடத்திற்கு மேலாக காதலித்த 2014 இல் திருமணம் செய்து கொண்டார்கள். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா அவ்வப்போது அட்லியுடன் எடுக்கும் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சாயிஷா, ஆர்யா : கஜினிகாந்த் படத்தின் இணைந்து நடித்ததன் மூலம் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் காதலித்தனர். அதன்பிறகு இரு குடும்பங்களின் சம்மதத்துடன் கடந்த 2019 இல் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் டெடி படத்தில் இணைந்து நடித்தனர். இவர்களுக்கு அரியானா என்ற பெண் குழந்தை உள்ளது.