காலேஜ் பையனாக நடித்துள்ள சிவகார்த்திகேயன்.. கலர்ஃபுல்லா வெளிவந்த டான் பட பர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் டான். இத்திரைப்படத்தை அட்லீயின் அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காலேஜில் நடக்கும் கலாட்டா பற்றி எடுக்க உள்ளனர்.

இப்படத்தை லைக்கா புரொடக்ஷன் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் எஸ் கே புரோடக்சன் தயாரிக்க உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. காலேஜ் பையனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளதால் இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன் காலேஜ் பயனாகவும் சிவாங்கி கல்லூரி மாணவியாகவும் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என படக்குழுவினர் கூறிவருகின்றனர்.

காப்பி அடிப்பதில் தலைவனை மிஞ்சிய எச் வினோத்.. தலைவலி தாங்காமல் தெவங்கிய ரசிகர்கள்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ஹெச் வினோத். இவர் இயக்கிய முதல் இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்தப் ...