காலி பசங்க காசுக்காக விமர்சனம் செய்றாங்க.! தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இதில் திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார். இவருடைய விமர்சனங்கள் எல்லாம் கேலியும், கிண்டலுமாக இருக்கும். இதனால் இவர் பல சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவருடைய வீடியோக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரிபர்ஸ் வைத்துள்ளார்.

இவருடைய விமர்சனத்தை பார்த்துவிட்டுதான் சிலர் திரைப்படங்களை பார்க்கின்றன. இதனால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என புலம்புகின்றனர். தற்போது அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமியின் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெலுங்கில் வெளியான நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி திரைப்படத்தை குறித்து வந்த விமர்சனங்களை பதிவிட்டுள்ளார்.

லவ் ஸ்டோரி திரைப்படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முதல் நடிகர்கள், நடிகைகள், நகைச்சுவை நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என எல்லோரும் கொண்டாடி வருகிறார்கள். இப்படி பாராட்டுவது சினிமாவிற்கு ஆரோக்கியமான விஷயமாக இருக்கும்.

ஆனால் இங்கு படம் நன்றாக இருந்தாலும் சினிமா விமர்சகர், ரசிகர்கள் என்ற பெயரில் சில காலி பயல்கள் தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிக்க தேவையற்ற விமர்சனங்களை சொல்லி வருகிறார்கள் என பதிவிட்டிருந்தார் இயக்குநர் சண்முகம். மேலும் திரைப்படங்களை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் தமிழ் ரசிகர்களை திரையரங்குக்கு வரவிடாமல் செய்பவர்கள் மாற வேண்டும்.

இது போன்ற களைகளை வேரறுத்து சகோதரத்துவத்தை வளர்ப்போம். தமிழ் சினிமாவை கொண்டாடுவோம் ஒருவர் வீழ்ச்சியால் இன்னொருவர் வாழ்ந்திட முடியாது என பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவை தெய்வத்திருமகள் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இயக்குனர் சண்முகன் முத்துசாமி, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இருவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக கலாய்த்து உள்ளார் மாறன்.

காலிப் பயல்களை கலாய்த்து குளிர் ஜுரத்தில் நடுங்க வைத்த நபருக்கும், இதை ரீட்வீட் செய்து விழிப்புணர்வு தந்து அசத்தி உள்ள மாண்புமிகு டாக்டர் தனஞ்ஜெயன் அவர்களுக்கும் பேரன்பு பெரிய வணக்கம். தொடர்ந்து கலாய்த்து தள்ள வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வேடிக்கையான சம்பவங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன என பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

டபுள் மீனிங்கில் சர்ச்சையான சமந்தா பாடல்.. அல்லு அர்ஜுன் அளித்த ஷாக்கிங் பதில்

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த வரும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுன் செம்மரம் கடத்துபவராக இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ...
AllEscort