காற்றுக்கென்ன வேலி பிரபலத்தை மாற்றும் விஜய் டிவி.. ரசிகைகளுக்கு பெரும் அதிர்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியல் கனா காணும் காலங்கள் சீரியல் போன்று இருப்பதால் இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலின் ஹீரோ சூர்ய தர்ஷனுக்கு  ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதிலும் பெண் ரசிகைகள் அதிகம் உள்ளனர். தற்போது இந்த சீரியலில் இருந்து தர்ஷன் வெளியேறி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தர்ஷன் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருவதால் இந்த சீரியலை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக சூர்யா கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சுவாமிநாதன் நடிக்க உள்ளார்.

சுவாமிநாதன் பல திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து ரொம்பவே பிரபலம் ஆனவர். புதிய சூர்யாவாக களமிறங்கும் சுவாமிநாதனுக்கு என்ன வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.

தர்ஷன் சீரியலை விட்டு வெளியேறி உள்ளதால் ரசிகர்கள் பலரும் கவலையில் உள்ளனர். தற்போது விஜய் டிவி சீரியல்களில் பல கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. இது சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு அதிக குழப்பத்தையே தருகிறது. சில நாட்களுக்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெயரை கெடுத்துக் கொண்ட இயக்குனருக்கு 4 படங்களா.? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகும் விஜய் சேதுபதி

தற்போது கோலிவுட்டில் படு பிசியான நடிகர் விஜய் சேதுபதி. எல்லா படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ...