கார்த்தியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மூத்த நடிகை.. தற்கொலைக்கு முயன்ற சம்பவம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் கார்த்திக். கார்த்திக் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கு இணையாக தனக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.

ரஜினி-கமல் படங்களுக்கு எப்படி வரவேற்பு இருக்குமோ அதே அளவிற்கு கார்த்தியின் படங்களுக்கும் அதிகளவில் வரவேற்புகள் இருந்துள்ளன. அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென சினிமாவில் ஒரு தனி இடம் பிடித்தார்.

கார்த்திக் அழகாக இருப்பதால் அப்போது பலருக்கும் கனவுக் கண்ணனாக இருந்துள்ளார். கார்த்திக்குடன் நடிப்பதற்கு பல நடிகைகளும் அப்போதெல்லாம் போட்டி போட்டுக் கொள்வார்கள். அந்த அளவிற்கு கார்த்திகைக்கு தனிப்பட்ட முறையில் வரவேற்புகள் இருந்தன. கிட்டத்தட்ட பல நடிகைகளுடன் கார்த்திக் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

கார்த்திக்கும் ஸ்ரீபிரியாவும் நினைவுகள் எனும் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். அப்போது கார்த்திக் மீது ஸ்ரீபிரியாவுக்கு காதல் வந்துள்ளது. கார்த்திகை விட ஸ்ரீபிரியா வயதில் மூத்தவர் அப்படியிருந்தும் கார்த்திகை காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் திருமணம் செய்யவும் ஆசைப்பட்டு உள்ளார்.

ஆனால் கார்த்திக் அப்போதெல்லாம் இந்த மாதிரி பல காதல்கள் அவருக்கு வந்ததால் இதனை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை மேலும் வயது மூத்தவர் என்பதால் அதனை பெரிதும் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார். ஆனால் ஸ்ரீ பிரியா கார்த்திகை கல்யாணம் பண்ணிய தீருவேன் என கூறியது மட்டுமில்லாமல் தற்கொலை முயற்சியில் செய்துள்ளார்.

இந்த செய்தி அப்போது பல பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் வெளியானது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் ஸ்ரீபிரியா. பின்புதான் ஸ்ரீபிரியா வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு தற்போது வரை வாழ்ந்து வருகிறார்.

செம்பருத்தி ஷபானாவின் திருமணம் பெற்றோருக்கு தெரியாதா? இதென்னடா புதுக் கூத்து!

சின்னத்திரை சீரியல்களில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவராக வலம் வருபவர் ஷபானா ஷாஜகான். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் ...