கார்த்திக் மனைவி ராகினியை பார்த்தீர்களா? தம்பியுடன் பிறந்தநாள் கொண்டாடிய கௌதம் கார்த்திக்

அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்திக் அவருடன் சேர்ந்தே அறிமுகமாகி இருப்பார் நடிகை ராதா. அதேபோல் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கும், நடிகை ராதாவின் மகளான துளசியும் சேர்ந்து அறிமுகமான படம்தான் கடல்.

நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக் அவரின் உண்மையான பெயர் முரளி முத்துராமன் சினிமாவிற்காக தன் பெயரை கார்த்திக் என மாற்றிக் கொண்டார்.

நவரச நாயகன் கார்த்திக் சோலைக்குயில் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை காதலித்து ராகினியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கௌதம் கார்த்திக் ,கேயின் கார்த்திக் என்ற மகன்களும் மனைவி ராகினியின்  தங்கையான ரதியையும் திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

கார்த்திக்கின் மூத்த மகனான கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான படத்தில் அறிமுகமானார் அதற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருப்பார். தாத்தா, தந்தை என இருவருமே சினிமாவில் இருந்தும் இவரால் சினிமாவில் அந்த அளவுக்கு பெயர் எடுக்க முடியவில்லை.

சிவாஜி, எம்ஜிஆர் அடுத்து முத்துராமனும் பேசப்பட்டார். ரஜினி, கமல் அளவுக்கு கார்த்திக்கும் ரசிகர்கள்  அதிகம். ஆனால் கௌதம் கார்த்திக்கிற்கு அந்த அளவுக்கு ரசிகர்கள் இல்லை. தற்பொழுது பத்து தலை, ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கௌதம் கார்த்திக், தன்னுடைய 32 ஆவது பிறந்தநாளை  நேற்று கொண்டாடினார், மிக எளிமையாக கொண்டாடினார்.

அப்பொழுது அம்மா ராகினி, தம்பி மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கௌதம் கார்த்திக். இந்தப் பிறந்தநாளில் மூலம் இனி வரும் படங்கள் வெற்றி பெற்று அதிக ரசிகர்களை பெற வேண்டும் என்று அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள்.. இணையத்தில் லீக் ஆன லிஸ்ட்!

விஜய் டிவி கடந்த ஐந்து சீசன் களாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது புது முயற்சியாக OTT-யில் நேரடியாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் வரும் ஜனவரி 28ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. ...