நவரச நாயகன் கார்த்திக் கலைமாமணி விருது,நந்தி விருது, நான்கு முறை ஃபிலிம்ஃபேர் விருது, நான்கு முறை தமிழக அரசு விருதுகளை பெற்றுள்ளார். அவர் நடிப்பில் ஹிட்டாகி விருதுகள் வாங்கிய படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம். ஒருகாலத்தில் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தவர். இன்று வரை இவரின் படங்களுக்கு ரசிகர் பட்டாளம் இருந்துதான் வருகின்றனர்.

அலைகள் ஓய்வதில்லை: 1981 ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் கார்த்திக் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார் நடிகை ராதா. இப்படத்தை இயக்கியவர் பாரதிராஜா. இப்படத்திற்காக சிறந்த அறிமுக நாயகன் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.

அக்னி நட்சத்திரம்: 1988 ஆம் ஆண்டு வெளியான அக்னி நட்சத்திரம் இத்திரைப்படத்தின் பிரபு உடன் இணைந்து நடித்திருப்பார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். இப்படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தமிழக அரசின் விருதை பெற்றார்.

வருஷம் பதினாறு: 1989ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருஷம் பதினாறு. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை குஷ்பு நடித்திருப்பவர். இப்படத்திற்கும் ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார் நடிகர் கார்த்திக்.

கிழக்கு வாசல்: 1990 ஆம் ஆண்டு கிழக்கு வாசல் திரைப்படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்திருந்தார் நடிகை ரேவதி. இந்த படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதை வாங்கினார்.

பொன்னுமணி: பொன்னுமணி திரைப்படத்தில் மறைந்த நடிகை சவுந்தர்யா மற்றும் சிவக்குமார் ஆகியோர் நடித்திருப்பார். இப்படத்திற்காக 1993 இல் பிலிம்ஃபேர் விருது பெற்றார்.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்: நடிகை ரோஜா உடன் நடித்திருந்த திரைப்படம் 1998 இல் வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். இப்படத்திற்காக தமிழக அரசு விருது மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கப்பட்டது.